சீமான் வீட்டுக்கு செல்லும் போலீஸ்.. வன்கொடுமை தடுப்பு வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்! யார் இவர்?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை பட்டாபிராம் போலீசார் நாம் தமிழர் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் சீமான் வீட்டுக்கு நேராக போலீசார் செல்ல உள்ளதாகவும், அதன் பிறகு நடக்க இருக்கும் சம்பவம் குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் துரை முருகன் பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்தது.

இதுதொடர்பாக சாட்டை துரை முருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு துரைமுருகன் கைதுக்கு எதிராக சீமான் பேசினார். அப்போது அவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் சாட்டை துரை முருகன் பாடிய பாடலை பாடியதோடு, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விட்டார்.
இதையடுத்து சீமான் மீது பல போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சீமானுக்கு எதிராக அஜேஸ் என்பவர் சென்னை பட்டாபிராம் போலீசில் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் மாநில பட்டியலின ஆணையத்தில் புகாரளித்தார்.
அதனை விசாரித்த மாநில பட்டியலின ஆணையம் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ஆவடி காவல் ஆனையகரத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 31ம் தேதி பட்டாபிராம் போலீசார் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது இந்த வழக்கு தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக பட்டாபிராம் உதவி காவல் ஆணையர் சுரேஷ் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் சீமானிடம் விசாரணை நடத்த உள்ளார்.
முதற்கட்டமாக சீமானிடம் அவரது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விசாரைண அதிகாரியான உதவி காவல் ஆணையர் சுரேஷ் குமார், சீமான் வீட்டுக்கு சென்று அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எப்ஐஆர்-யை காண்பித்து அதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையை தொடர்ந்து சீமான் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இருப்பினும் சீமான் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பது இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைனைக்கு பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications