Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் கைது: நடிகை மீரா மிதுன் மீது பாய்கிறது குண்டர் சட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டியலின மக்களை இழிவாக பேசியதால் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video

    கைது செய்யப்பட்ட Meera Mithun கேரளாவிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டார் | Oneindia Tamil

    மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் நடிகை மீரா மிதுன். சில படங்களில் சிறு காட்சிகளில் மீரா மிதுன் நடித்திருக்கிறார்.

    விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் மீது அவதூறான புகார்களை தெரிவித்து பரபரப்புகளை ஏற்படுத்தி இருந்தார்.

    ரசிகர்களுடன் மோதல்

    ரசிகர்களுடன் மோதல்

    பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் தாம் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்தார். பொதுவாக மீரா மிதுன் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சைகளை உருவாக்காமல் இருந்தது இல்லை. நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோரை அவதூறாக பேசி அவரது ரசிகர்களுடன் மோதி பரபரப்பை கிளப்பினார்.

    ஜாதிய இழிவு பேச்சு

    ஜாதிய இழிவு பேச்சு

    அத்துடன் பணமோசடி உள்ளிட்ட பல புகார்களும் மீரா மிதுன் மீது நிலுவையில் உள்ளன. ஆனாலும் அவர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயாமல் இருந்தது. இந்த தைரியத்தில்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் யூ டியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், திரைத்துறையில் உள்ள பட்டியல் இன இயக்குநர்கள், நடிகர்களை மிக இழிவாக பேசியிருந்தார் மீரா மிதுன். அவருடன் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சாம் அபிஷேக்கும் அந்த வீடியோவில் இருந்தார். மீரா மிதுனின் இந்த அடாவடித்தனமான இழிவான பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    மீரா மிதுன் மீது புகார்

    மீரா மிதுன் மீது புகார்

    இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் போலீசில் புகார் கொடுத்தனர். மீரா மிதுன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டது. அப்போதும் கூட என்னை போலீசால் தொடக் கூட முடியாது; முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார். அத்துடன் தமிழகத்தில் இருந்து தப்பி கேரளாவுக்குப் போய் தலைமறைவானார் மீரா மிதுன்.

    கேரளாவில் அடாவடி

    கேரளாவில் அடாவடி

    பின்னர் மீரா மிதுன் பதுங்கி இருந்த கேரளா ஆழப்புழா விடுதிக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சென்றனர். அப்போது போலீசாருடன் கடுமையாக வாக்கு வாதம் செய்த மீரா மிதுன், அப்போது ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் போலீசார் தம்மை டார்ச்சர் செய்கின்றனர்; இங்கிருந்து அவர்களை போக சொல்லுங்கள் என கூச்சலுடன் கதறியபடி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். இருந்தபோதும் ஒருவழியாக கடந்த 14-ந் தேதி மீரா மிதுனை போலீசார் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர்.

    பாய்கிறது குண்டாஸ் சட்டம்

    பாய்கிறது குண்டாஸ் சட்டம்

    கேரளாவில் இருந்து சென்னை வரும் வரையிலும் போலீசாரை மிக கேவலமாக ஒருமையில் விமர்சித்து வந்தாராம் மீரா மிதுன். ஆனாலும் போலீசார் அமைதியாக இருந்தபடியே சென்னை வேப்பேரி காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்திருக்கிறார் மீரா. இதனால் நேற்று மாலை அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்., பின்னர் வரும் 27-ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார் மீரா மிதுன். மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மீரா மிதுன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயக் கூடும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். சமூக வலைதளங்களில் இதேபோல் ஆபாசமாக பதிவிட்டு அவதூறு பரப்பி வந்த வலதுசாரியாளர் கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. யூடிபில் பப்ஜி விளையாடுவதாக கூறி ஆபாசமாக பேசிய மதன் மீதும் குண்டாஸ் பாய்ந்துள்ளது. இந்த வரிசையில் நடிகை மீரா மிதுன் மீதும் குண்டர் சட்டம் பாய இருப்பதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+