ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! மே.வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீர் மீட்டிங்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை மக்கள் மாளிகையில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து விடை கொடுத்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கேரள ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 15 ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக அரசியல் கட்சிகள் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, தலைமைச் செயலாளர் இறையன்புவை அழைத்த ஆளுநர், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக அறிக்கை கேட்டு உத்தரவிட்டார்.
இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறி, ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை, சட்டப்பேரவை நிறைவேற்றிய 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி அதை சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார். இதனைக் கண்டித்து, தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.
வம்பர் மாதம், ஆளுநரின் அரசியலமைப்புக்கு எதிரான நடத்தை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் திமுக மனு அளித்து, ஆளுநரை திரும்பப் பெறக் கோரியது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழ்நாடு" என்பதற்குப் பதிலாக "தமிழகம்" என்பதே மிகவும் பொருத்தமான சொல் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
மேலும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் அதிரடியாக நீக்கினார். பின்னர், தமிழக அரசின் எதிர்ப்பால் இந்த உத்தரவை அவரே திரும்பப் பெற்றார். அக்டோபர் மாதம், ஆளுநர் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையின்றி தாமதப்படுத்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது தவறானது என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குறிப்பிட்டதுடன், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியதாக உத்தரவிட்டது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு இரண்டு முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். நீண்டகாலம் எடுத்துக்கொண்டு, மாநில அரசின் பெரும் அழுத்தத்துக்குப் பிறகே ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
இதேபோன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார். 2022 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முதல் உரையை முழுமையாக படித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, 2023 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் வாசிப்பதற்காக அரசு தயாரித்த உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகியவற்றை உச்சரிக்க மறுத்தார்.
அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்தார். இதனால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி. இதேபோன்று 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற காரணத்தை எழுப்பி, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தன.
இந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக பதவி வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவியை மக்கள் மாளிகையில் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications