Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பளிச் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்துவிட்டது. டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் டீசல் 95.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயரலாம் எனத் தகவல் பரவியது.

பெண்களுக்கு இலவசம்

பெண்களுக்கு இலவசம்

இருப்பினும், இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், "இலவச பேருந்து சேவை மூலம் பெண்கள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 15,227 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு பேருந்துகள்

அரசு பேருந்துகள்

இந்த எண்ணிக்கை வரும் காலத்தில் மெல்ல உயர்த்தப்படும். மலைப் பகுதிகளில் மட்டும் அரசு சார்பில் 498 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 2,650 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளதால் ஏசி பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. கும்மிடிப்பூண்டியில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

புதிய பேருந்துகள்

புதிய பேருந்துகள்

டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும். அதேபோல புதிதாக 2,000 புதிய டீசல் பேருந்துகள் வாங்கத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் எட்டுக்குப்பட்டு வருகின்றன.

பஸ் கட்டணம் உயராது

பஸ் கட்டணம் உயராது

அரசுப் போக்குவரத்துத் துறையில் 7000 பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய பணியாளர்களைச் சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும். கொரோனாவுக்கு முன்பு அரசு பேருந்துகளில் 1.60 கோடி பேர் பயணித்த நிலையில், இப்போது அது 90 லட்சம் ஆகக் குறைந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. அதேநேரம் இது குறித்து காலப்போக்கில் அப்போது இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+