மயிலாப்பூர் இந்து நிறுவனத்தில் தேவநாதன் பல கோடி மோசடி.. அண்ணாமலையின் மௌனத்திற்கு காரணம் என்ன?
சென்னை: தேவநாதன் இயக்குநராக இருந்த 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் யாதவ் மீது புகார் எழுந்ததால் தேவநாதன் உட்பட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இடைக்கால ஜாமீனில் தான் தேவநாதன் யாதவ் வெளியேவந்துள்ளார். ஊழல் குறித்து விமர்சிக்கும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் மொளனமாக இருப்பது ஏன் என்று இணையதளங்களில் விமர்சிக்கின்றனர்.
தேவநாதன் யாதவ் இயக்குநராக இருந்த 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் சுமார் 400 கோடிக்கு மேல் மோசடி நடந்தததாக புகார் எழுந்தது. இதையடுத்து தேவநாதன் யாதவ் உட்பட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமீன் முயற்சிகளும் இரண்டு முறைக்கு மேல் நிராகரிக்கப்பட்டது.இந்த வழக்கில் ஓராண்டுக்கு மேலாக முன்னேற்றம் இல்லாததால் ஏன் தேவநாதனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்த நீதிபதி அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

இடைக்கால ஜாமீன்
சொந்த பணமாக 100 கோடியை நிதி நிறுவனம் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து அக்டோபர் 30 ஆம் தேதி வரை தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன்படியே இடைக்கால ஜாமீனில் தான் தேவநாதன் யாதவ் இருக்கிறார்.
2000 கிலோ தங்கம்
முன்னதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் கூறும் போது, தேவநாதன் யாதவிடம் சுமார் 2000 கிலோ தங்கம் இருக்கிறது என்றும், தேவநாதன் குறித்து தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களில் அந்த 2000 கிலோ தங்கம் குறித்த ஆவணங்கள் இடம்பெறவில்லை என்றும், அந்த 2000 கிலோ தங்கத்தை கைப்பற்றினாலே தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க முடியும் என்றும் கூறினார்கள்.
வில்லங்கமான 300 கோடி சொத்து
அதேபோல் பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும் போது, 'நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் என தெரிய வந்திருக்கிறது என்றார். ஒட்டுமொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை.. அவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதும் தெரியவில்லை..
பாதிக்கப்பட்டவர்கள் விளக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி லிமிடெட் மோசடி சம்பந்தமாக மயிலாப்பூர் நிதி பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மோகன் அண்மையில் பேசுகையில், "151 ஆண்டுகள் பழமையான நிதி நிறுவனம் தான் மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்டு நிதி லிமிடெட் நிறுவனம் ஆகும், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நாங்கள் இணைந்ததாக சில நபர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு நாங்கள் எங்களுடைய மறுப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
440 கோடி மோசடி
இது முதலில் நம்பகத்தன்மையான நிறுவனமாகத் தான் இருந்தது. 2016 வரை அது ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தது. 2016 பிறகு சுமார் 440 கோடி ரூபாய் அளவில் மோசடிகளை தேவநாத யாதவ் செய்துள்ளார். இதில் வைப்பு வைத்துள்ளார்கள் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்கள், வயதான பிறகு தங்களுடைய பிள்ளைகளுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்க இதில் பணம் செலுத்தி அதில் வரும் வட்டியை வைத்து வாழலாம் என்று எண்ணி தான் இதில் இணைந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இதுவரை வட்டியும் வரவில்லை அசலும் வரவில்லை.
5000 குற்றப்பத்திரிக்கை
பொருளாதார குற்றப்பத்திரிக்கை போலீசார் 4000லிருந்து 5000 வரை குற்றப்பத்திரிகைகளை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தேவநாதயாதவ் உச்ச நீதிமன்றத்தில் சென்று தப்பித்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார். எனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
500 கோடி பதுக்கல்
450 கோடி முதல் 500 கோடி வரை தேவநாத யாதவ் இதில் பதுக்கி உள்ளார், இதில் வைப்பு நிதி வைத்து உள்ளவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தான், இதில் பத்து பேர் இறந்துள்ளார்கள், எங்கள் பணம் எப்போது எங்களுக்கு வரும் என்று தெரியவில்லை. விரைவு நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து தக்க நீதி வழங்க வேண்டும், உடனடியாக பணத்தை மீட்டு தர வேண்டும்.
100 கோடி நிதி
தேவநாத யாதவ் நீதிமன்ற வாயிலில் அவருடைய வழக்கறிஞர்கள் உடனடியாக 100 கோடியை விடுவிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறி தான் வெளியே வந்தார், ஆனால் இன்னும் பணத்தை தரவில்லை. கிட்டத்தட்ட 6 ஆயிரம் நபர்கள் இதில் பணத்தைக் கட்டி இழந்துள்ளோம், ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 145 நபர்கள் தான் வைப்பு நிதி வைத்துள்ளார்கள் என்று அவர் முறையிடுகிறார்.
450 கோடி ஏமாற்றினார்
2016 ஆம் ஆண்டிலிருந்து எங்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று இதில் தெளிவாக செய்திருக்கிறார்கள். 450 கோடி ரூபாய் எங்களுடைய வைப்பு நிதி எடுத்து தங்களுடைய குடும்பத்தினருக்கு அவர் சொத்து சேர்த்து வைத்துள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கு விசாரணை தொடங்க வேண்டும்,
அரசியல் கிடையாது
அவர் கொடுத்த காசோலை ஆறு கோடி ரூபாய் திரும்பவும் ரிட்டன் ஆகியுள்ளது. தேர்தல் நேரம் அப்படித்தான் ஆகும் என எங்களை ஏமாற்றினார். அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக என்னை உள்ளே வைத்துள்ளார்கள் என்று அவர் கூறுகிறார் ஆனால் அது அப்படி கிடையாது. இது போன்ற ஒரு பிம்பத்தை அவர் ஏற்படுத்துகிறார். புகார் தாரர்கள் 5000 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் அனைவரையும் இணைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தின் தரவுகளை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
அண்ணமாலைக்கு கேள்வி
இவ்வளவு பெரிய முறைகேட்டில் தொடர்புடைய தேவநாதன் யாதவ் தான் பாஜக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பிரச்சாரமும் பாஜக தலைவர்கள் தீவிரமாக செய்தார்கள். ஆனால் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்த பின்னர், இதுவரை பாஜக ஏன் அமைதியாக இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சமூக ஆர்வலர் பத்ரி கேள்வி
இதனிடையே ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அமைதியாக இருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர் பத்ரி கேள்வி எழுப்பி உள்ளார். Dialogue Tamil என்ற யூடியூப் சேனலில் சமூக ஆர்வலர் பத்ரி கூறுகையில், மேலும் ஒரு பரபரப்பான ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையில் ஒரு நிறுவனம் 6000 மக்களிடம் இருந்து 700 கோடி முதலீடு வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட்டார்கள்.. அந்த நிறுவனத்தின் பெயர் 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்'.

பேசாமல் இருப்பது ஏன்
இந்த நிறுவனத்தின் பெயரிலேயே இந்து இருக்கிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தேவநாதன் யாதவ். அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டவர். இந்துக்களை பாதுகாக்கிறேன் என்று சொல்லக்கூடிய ஒரு கட்சியினுடைய நாடாளுமன்ற வேட்பாளர், 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தை நடத்தி,6000 இந்துக்களிடம் இருந்து 700 கோடியை சுருட்டிக் கொண்டு ஓடிப்போய்விட்டார்.
ஹெச் ராஜா அமைதி ஏன்
ஆனால் ஊழலை ஒழிப்பேன் என்று கூறும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்த ஊழல் சம்பந்தமாக பேசாமல் இருக்கிறார். மௌனமாக இருக்கிறார் என்ற கேள்வி இருக்கிறது. சிவகங்கை தொகுதி யாருடைய தொகுதி என்றால், பாஜகவின் முக்கியமான தலைவர் ஹெச் ராஜாவின் தொகுதி. அந்த தொகுதியில் போட்டியிட்ட தேவநாதன் யாதவ் மிகப்பெரிய முறைகேட்டில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை கண்டிக்கிற பொறுப்பு ஹெச் ராஜாவிற்கு இருக்கிறது. ஆனால் அவர் கேள்வி எழுப்பவே இல்லை" என்று விமர்சித்தார். மேலும் அதன் பின்னணி குறித்தும் கடுமையான கேள்விகள் அவர் முன்வைத்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications