நைட்டோடு நைட்டாக நடந்த "வேட்டை".. டிஜிபி வலையில் சிக்கிய "89 பேர்".. விடிய விடிய கதகளி.. அலறிய ஆவடி
சென்னை: சென்னையில் ஒரே இரவில் மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் தட்டிதூக்கி உள்ளனர்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ளனர்.. புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார்..
அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சங்கர் மாற்றப்பட்டு ஆவடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.. அந்தப் பதவியில் இருந்த அருண், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டளைகள்: புதிதாக பதவி ஏற்ற 2 அதிகாரிகளும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்களை குறைப்பது குறித்து தீவிர ஆலோசனையை நடத்தினார்கள்.. இந்த ஆலோசனையை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், சென்னை, தாம்பரம், ஆவடி தவிர மாநிலத்தில் உள்ள மற்ற போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளர்.
குறிப்பாக, 10 கட்டளைகளை பிறப்பித்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் ரவுடிகள், குற்றவாளிகளுக்கு எதிராக வேட்டைகள் ஆரம்பமாகியிருக்கிறதாம்.. அதாவது, சென்னை மாநகர போலீஸை பொறுத்தவரை, மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிதாக ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் மட்டும் மொத்தம் 25 காவல் நிலையங்கள் உள்ளன..
லிஸ்ட் ரெடி: இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காகத்தான், புதிய கட்டளைகளை புதிய கமிஷனர் பிறப்பித்திருந்தார்.. அதன்படி, அதிரடி ஆபரேஷன் ரெடியானது.. இதற்காகவே, போலீசார் களமிறக்கப்பட்டனர்.. ரவுடிகள் குறித்த லிஸ்ட் தயாரானது.. கொடூர கொலைகள், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் பெரிய "தாதா"க்கள், "A பிளஸ்" ரவுடிகள் வகைப்படுத்தப்பட்டனர்.
இதில் கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள் 'A' பிரிவிலும், அடிதடி, மாமூல் வசூலிக்கும் ரவுடிகள், "B" பிரிவிலும், கொலை முயற்சி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் ரவுடிகள், "C" பிரிவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதையடுத்து, கோர்ட்டில் ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வரும் இவர்களை கைது செய்யவே நேற்று முன்தினம் அதிரடி ஆரம்பமாகி, ரவுடிகளுக்கு எதிராக விடிய விடிய வேட்டை நடத்தப்பட்டது.
இதில் ஒரே இரவில், 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்கள் அனைவருமே கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்..
அதிரடி தொடரும்: இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர், கோர்ட்டு வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications