அமித்ஷாவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி இப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி
சென்னை: குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த போது 2010-ல் போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்த சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு டிஜிபி கந்தசாமி, தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக டிஜிபி கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தியவர். 2010-ல் சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை கைது செய்த சிபிஐ டீமின் தலைவர் டிஜிபி கந்தசாமி.
பின்னர் இந்த வழக்குகளில் இருந்து அமித்ஷா விடுதலையானார். அதேபோல் கேரளாவில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய லால்வின் ஊழல் வழக்கை விசாரித்தவரும் டிஜிபி கந்தசாமிதான். முன்னதாக 2007-ல் கோவாவில் பிரிட்டிஷ் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ததும் கந்தசாமி தலைமையிலான டீம்தான்.
ஏற்கனவே முந்தைய அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை ஆளுநரிடம் திமுக பக்கம் பக்கமாக கொடுத்திருக்கிறது. தற்போது திமுக ஆட்சியில் பல முக்கியமான விசாரணைகளில் திருப்பங்களை ஏற்படுத்திய டிஜிபி கந்தசாமி, லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications