போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் போட்டோ எடுத்தது ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
சென்னை: போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தாம் இருக்கும் புகைப்படம் குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள். இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிகிறது. இதனால் ஜாபர் சாதிக் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சென்னை காவல் துறை ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் (தற்போதைய டிஜிபி) ஒரு விருது வழங்குவது போன்ற புகைப்படம் வெளியானது.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தனர். போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விஷயங்களை கூறியிருந்தனர்.
அப்போது ஜாபர் சாதிக்குடன் சங்கர் ஜிவால் இருக்கும் புகைப்படம் குறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது: இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், இருந்தாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.
நான் சென்னை காவல் துறை ஆணையராக இருந்த போது நிறைய ஸ்பான்சர்கள் சிசிடிவி கேமராக்களை வழங்கினர். ஒரு 15 ஸ்பான்ஸர்கள் இருந்தனர். அவர்களில் ஜாபர் சாதிக்கும் ஒருவர். 2013 ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மீது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட 2017இல் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிதான் இது.
போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என தெரிந்ததும் அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நீக்கி, அவர்களிடமே திருப்பி கொடுத்து விட்டோம். அதற்கு பதிலாக வேறு 10 சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டோம். மேலும் ஜாபர் சாதிக்கிற்கு நான் கொடுத்தது விருது அல்ல. அது வெறும் பரிசு பொருள்தான். token of appreciation க்காக விருது வழங்கினோம். இவ்வாறு சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications