ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி.. புது ஆபரேஷன் ஆரம்பம்.. இனி ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. பறந்த ஆர்டர்
டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்
சென்னை: வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றம் சம்பந்தமான வழக்கை உடனடியாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சமீபகாலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டு கொலை நடக்கும் சம்பவங்கள் அதிகரித்தபடியே வந்தன..
குறிப்பாக, சென்னை கே.கே நகரில் முன்விரோதம் காரணமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பானது... அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவக்குமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியிருந்தது..

தமிழகம்
தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்திருந்தார்.

வழக்குகள்
அதில் ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீட்டை கண்காணித்து அவர்கள் பதிவு வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டிருநதார்.. அதன்படியே, தமிழக காவல்துறை மூலம் DARE Operation என ரவுடிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை துவங்கியது.. தமிழகம் முழுவதும் 16,370 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.. அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன..

வன்முறையாளர்கள்
இந்நிலையில், வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றம் சம்பந்தமான வழக்கை உடனடியாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்... தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து காவல் துறையினருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி
அதில், "21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, 12 ஆயிரத்து 810 கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் செய்தல் என நகர்ப்புற தேர்தல் அனைத்தும் அசம்பாவிதங்களின்றி சிறப்பாக நடந்து முடிந்தன. சிறிய பிரச்சினைகள் எழுந்தபோது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல் துறையினர் எதிர்கொண்டனர். இதற்காக இரவும் பகலும் அயராது பணியாற்றிய காவல் துறை அலுவலர்கள், காவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகள்
இதைத்தொடர்ந்து ஏழு உத்தரவுகளை காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அவை:
வன்முறையாளர்கள், கூலிப்படையினர் கொலைக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடித்து விரைவில் தண்டனை பெற்று, அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். கண்டுபிடிக்கப்படாமல், நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்படவேண்டும். திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட வேண்டும்.

சிறைதண்டனை
தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரி முன் ஆஜர்படுத்தி நல்லொழுக்கப் பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களை அன்றாடம் கண்காணிக்கப் படுதல் வேண்டும். இவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும்.

வாகன விபத்துக்கள்
அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.வாகன விபத்துகளைக் குறைக்க செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.குற்றவாளிகளின் புகைப்படங்களை, காணொலிகளை ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.இந்த உத்தரவுகளை அனைத்து காவல் துறையினர் பின்பற்ற வேண்டும்" என்றும் டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications