Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவாகரத்து வழக்கில் இன்றும் ஆஜராகாத தனுஷ்- ஐஸ்வர்யா! அப்போ அதெல்லாம் உண்மையா இருக்குமோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது அவர்கள் இருவருமே ஆஜராகாததால் இந்த வழக்கு நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அத்துடன் அவருடைய முன்னாள் மருமகனும் ஆவார். அவருடைய மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.

dhanush court aiswarya

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அன்யோன்யமாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென பிரிவதாக அறிவித்தனர். இருவரும் தனித்தனியே தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர்களது பிரச்சினையை தீர்த்து அவர்களை ஒன்று சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்பட்டது. ஐஸ்வர்யாவும் தனது பெயரில் இருந்த தனுஷ் என்ற பெயரை தூக்கிவிட்டார்.

அது போல் தனுஷும் தனது படத்தின் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கும் அவருடைய மகன்களை அழைத்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகாததால் இந்த வழக்கு அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய தினமும் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இருவரும் தங்கள் மகன்களுக்காக மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக தகவல்கள் கூறும் நிலையில் இவர்கள் தொடர்ந்து இரு வாய்தாக்களிலும் ஆஜராகாதது சந்தேகத்தை எழுப்புகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+