அப்படி திட்டிய பிறகு.. திருமண விழாவில் ஒரே வரிசையில் உட்கார்ந்து பங்கேற்ற நயன்தாரா, தனுஷ்
சென்னை: தனது ஆவண படத்திற்கு என்ஓசி தராதது தொடர்பாக நடிகர் தனுஷை மிகக் கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தது சர்ச்சையாகியிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.. கேரளாவில் டிவி தொகுப்பாளராக கேரியரை தொடங்கிய நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவில் டாப் நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்தியில் கூட ஷாருக் கானுடன் இவர் நடித்த ஜவான் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஆவணப் படம்: இவர்களின் காதல், திருமணம் தொடர்பான ஆவணப்படம் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப் படம் நயன்தாரா திருமணம் முடிந்த உடனே வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. இருப்பினும், அது வெளியாகவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என்று சொல்லி அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டு இருந்தார்.
நானும் ரவுடிதான்: அதாவது நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த நிலையில், அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. எனவே, அந்த படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தத் தயாரிப்பாளர் என்ற முறையில் தனுஷிடம் அனுமதி கோரியிருந்ததாகவும் இருப்பினும் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்தும் அவர் அனுமதி தரவில்லை என்று நயன்தாரா தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
மேலும், ஆவணப் பட டிரைலரில் படத்தின் மேக்கிங் தொடர்பாக சில நொடிகள் பயன்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அதற்கு 10 கோடி நஷ்டஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகச் சொல்லி நயன்தாரா விமர்சித்து இருந்தார். இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், இப்போது தனுஷ், நயன்தாரா இருவரும் இப்போது தயாரிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

இருவரும் பங்கேற்பு: ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக 'இட்லி கடை' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமண நிகழ்ச்சியில் தான் இருவரும் பங்கேற்றுள்ளனர். இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற இது தொடர்பான போட்டோ வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.
நெட்டிசன்கள்: நயன்தாரா, மற்றும் தனுஷ் உட்கார்ந்துள்ள தோரணையைப் பார்த்த ரசிகர்கள், நிஜமான படையப்பா சீன் பார்ப்பது போல உள்ளதாக புழகாங்கிதம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், எல்லாம் ஆவணப் படத்திற்காக நயன் செய்த ஸ்டன்ட்தான். பாவம் தனுஷ் பெயர்தான் கெட்டுப்போனது என்று பச்சாதாபம் கொட்டுவோரும் உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications