நயன்தாராவிற்கு சிக்கல்.. கடிதத்தால் வந்த வினை.. தனுஷ் எடுக்க போகும் முக்கிய முடிவு? புது ரூட்?
சென்னை: நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவிற்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் தனது லீகல் டீமுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா கடிதத்தில் தனுஷை அவமானப்படுத்தும் விதமாக தகவல், கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக இந்த மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்த பின் முறையாக தனுஷ் தரப்பில் வழக்கு பதியப்படும் என்கிறார்கள்.

நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை நான் எழுதி உள்ளேன். உங்கள் தந்தை மற்றும் சிறந்த இயக்குனரான உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஒரு பிரபல நடிகராக நீங்கள் வலம் வருகிறீர்கள். உங்களை போல அல்லாமல் சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம். சினிமாதொழில்துறையில் எந்த தொடர்பும் இல்லாத சுயமாக வந்த பெண் நான். நான் இன்று வகிக்கும் இந்த பதவிக்கு நான் போராட வேண்டியிருந்தது. அது சாதாரணமாக வரவில்லை.
நான் வெளியிடப்போகும் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மட்டுமல்லாது பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் கடந்து இந்த ஆவணப்படத்தை வெளியிட உள்ளோம். மிகப்பெரிய குழு இதற்காக பணிகளை செய்துள்ளது. இது என்னை பற்றிய, என் வாழ்க்கையை பற்றிய , என் திருமணத்தை பற்றிய, நான் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் பற்றிய ஆவணப்படம்.
ஆனால் என் வாழ்வில் முக்கியமான படமான.. நானும் ரவுடிதான் படத்தின் கிளிப் ஒன்றையும், பாடலையும் வைக்க முடியாமல் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக கடந்த 2 வருடமாக உங்களிடம் என்ஓசி வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதனால் அந்த படத்தில் உள்ள பாடல் ஒன்றை கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். அந்த படத்தில் வேலை பார்த்த சில புகைப்படங்களை கூட பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.ஆனால் இந்த காட்சிகள், பாடல்கள், புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு கொடுக்காமல் போனது என் இதயத்தை நொறுக்குகிறது.
நீங்கள் பிஸ்னஸ் தேவைகள் மற்றும் பண தேவைகள் காரணமாக இப்படி செய்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.நான் பர்சனலாக எடுத்த.. எங்கள் போனில் எடுத்த சில புகைப்படங்கள் வீடியோக்களை கூட பயன்படுத்த அனுமதிக்காமல் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுத்ததும் கூட எங்கள் மனதை உருக்கி உள்ளது. உங்களின் மோசமான குணத்தை காட்டுகிறது. நீங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டீர்கள் என்பதை இது காட்டுகிறது. எங்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம்தான் இதற்கு காரணம். 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் கேட்பதில் என்ன நியாயம். எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.
நீங்கள் உங்களுடைய அடுத்த ஆடியோ லாஞ்சில் கதைகளை சொல்லி கட்டுக்கதையாக பேசுவீர்கள் என்று தெரியும். சினிமாவிற்கு வெளியே தனிப்பட்ட வகையில் இவ்வளவு வன்மத்தோடு நீங்கள் செயல்படும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது, என்று நயன்தாரா குறிப்பிட்டு உள்ளார்.
தனுஷ் லீகல் நோட்டீஸ்: இந்த நிலையில் நடிகை நயன்தாராவிற்கு நடிகர் தனுஷ் அனுப்பிய லீகல் நோட்டீஸ் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது 10 கோடி ரூபாய்க்கு நடிகை நயன்தாராவிற்கு நடிகர் தனுஷின் லீகல் டீம் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், நானும் ரவுடிதான் படம் தனுஷ் தயாரித்தது. ஒப்பந்தத்தின்படி.. படத்தின் எல்லா காட்சிகளும் தனுஷுக்கு சொந்தமானது. படத்தின் தயாரிப்பு காட்சிகள்.. அதாவது பிடிஎஸ் காட்சிகள் தனுஷுக்கு சொந்தமானது.
இந்த பிடிஎஸ் காட்சிகளை தனுஷ் பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. அதை மீறி.. நயன்தாரா தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் அதை பயன்படுத்தி உள்ளார். இந்த காட்சிகளை அவர் நீக்க 24 மணி நேரம் டைம் தரப்படும்.. அவர் நீக்கவில்லை என்றால் 10 கோடி ரூபாய்க்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்படும் என்று தனுஷ் லீகல் டீம் கூறி உள்ளது. இதையடுத்தே.. டிரைலரில் வந்த பிடிஎஸ் காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்தே தனுஷுக்கு எதிராக நயன்தாரா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications