தனுஷுக்கு அர்ஜுன் மூர்த்தி ஆலோசகரா? பாஜக போட்ட கணக்கு.. உடனே ரஜினி சொன்ன அந்த வார்த்தை
சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவலை தனுஷ் தரப்பும், நற்பணி மன்ற நிர்வாகிகளும் மறுத்துள்ளனர். இதுகுறித்து பிரத்யேக ஒன்று தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!
முன்னணி நடிகரான தனுஷ் அரசியலில் களமிறங்க போவதாக கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி, ரசிகர்களை ஒருங்கிணைத்து வரும் தனுஷ், அரசியல் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

குறிப்பாக, "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாக தகவல்கள் பரவி, அரசியல் களத்தை சூடாக்கி விட்டது..
தனுஷ் புதிய அரசியல் கட்சி - கொடி
அதுமட்டுமல்ல, இந்த பரபரப்புக்கு நடுவில், தனுஷ் 2 நாட்களாக டெல்லியில் தங்கியிருந்து, தமிழக அரசியலில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள், எதிர்காலத் தேர்தல் திட்டங்கள், கட்சியை முறைப்படி தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், தேசிய அளவிலான முக்கிய பிரமுகர்களையும் அரசியல் வியூக நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கு நடுவில், தனுஷின் ரசிகர் மன்றம் பயன்படுத்தும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடியும், பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியது..
அந்த கொடி அரசியல் கட்சியின் கொடியை போலவே இருப்பதாக பேசப்பட்ட நிலையில், அது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருப்பதாக ரசிகர் மன்றத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது... இப்படி தனுஷின் அரசியல் வருகை குறித்த பல்வேறு தகவல்கள் றெக்கை கட்டி பரந்து வரும் சூழலில்தான், நமக்கு தற்போது கிடைத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
தனுஷ் தரப்பு மறுப்பது என்ன?
அதாவது, தனுஷ் கட்சி தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாகவும் பரவும் தகவல்களை அவரது தரப்பும் நற்பணி மன்ற நிர்வாகிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து நாம் அவர்களிடம் பேசியபோது, "தனுஷிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை, அரசியலுக்கு வருவது குறித்து அவர் முடிவெடுத்தால் அதை அவரே நேரடியாக அறிவிப்பார்.. தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து நலத்திட்டப் பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்தில் எந்தக் கட்சியையும் அவர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை" என்று நம்மிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அரசியல் ஆலோசகர் யார்
இப்படி தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் ஒருபுறம் தொடரும் நிலையில், அவருக்கு அரசியல் ஆலோசகராக யார் நியமிக்கப்படுவார் என்ற விவாதமும் தற்போது வெடித்து கிளம்பியுள்ளது.
அன்று ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, அவருக்கு ஆலோசகராக பாஜக பிரமுகர் அர்ஜுன் மூர்த்தியை அக்கட்சி அனுப்பி வைத்தது. இப்போது அதே அர்ஜுன் மூர்த்தியை தனுஷின் அரசியல் ஆலோசகராக நியமிப்பது குறித்து ரஜினியிடம் பாஜக தேசியத் தரப்பிலிருந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ரஜினி, "எந்த முடிவையும் இப்போது முடிவு செய்ய வேண்டாம்" என தெரிவித்திருக்கிறாராம். அப்படியானால் தனுஷ் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த பிறகே ஆலோசகர் நியமனம் குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன...!!
- நமது சிறப்பு நிருபர் எழில்




Click it and Unblock the Notifications
