மக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்
சென்னை: குளு..குளு..ஸ்விட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் போயுள்ளார் தர்மபுரி திமுக எம்.பி.செந்தில்குமார்.
மக்களவை தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து முதல் கூட்டத்தொடர் என பரபரப்பாகவே இருந்த எம்.பி.க்கள் பலரும் தங்களை சற்று ஆசுவாசப்படுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த 4 மாதகாலமாக தேர்தல், மக்களவை கூட்டம், பட்ஜெட், என ஓட்டமும், நடையுமாய் இருந்த தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார், குடும்பத்தினருக்கு என நேரம் ஒதுக்கி அவர்களுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

லோக்சபா கூட்டம்
லோக்சபா கூட்டம் இந்த முறை அனல் பறந்தது. காரணம் பல முக்கிய மசோதாக்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன. மேலும் திமுக எம்.பிக்கள் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் காட்டிப் பேசியதும் ஒரு காரணம்.

கடமையை செய்த செந்தில்குமார்
அரசியல்வாதிகள், அதிலும் தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிடுவது என்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்தக் காலத்தில், மனைவி, மகன், மகளுக்காக நேரம் செலவிட்டு கணவனுக்குரிய கடமையை, தந்தையைக் குரிய கடமையை சரிவர செய்துள்ளார் செந்தில்குமார் எம்.பி.

பயணம்
இவரது வெளிநாட்டு பயணம் குறித்து தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், எம்.பி.ஊரில் இல்லையென்றாலும் நாள்தோறும் மூலம் தொகுதி பிரச்சனைகளை பற்றி அறிந்து அதனை தீர்க்க எங்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பிப்பார் என பெருமிதப்படுகின்றனர்.

சண்டைக்கே இடமிருக்காது
செந்தில்குமார் எம்.பி.யை பின்பற்றி மற்ற அரசியல்வாதிகளும் நாட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்துக்கு அளித்தால் சண்டை சச்சரவுக்களுக்கே இடமிருக்காது. தனது சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களை செந்தில் குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications