மணிக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயமா அய்யா? தருமபுரியில் சௌமியாவுக்கு ராமதாஸ் வைத்த செக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் வட மாவட்டங்களில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு விசித்திரமான அரசியல் சூழல் நிலவி வருவதாக தெரிகிறது.. இது தொடர்பான முணுமுணுப்புகள் தைலாபுரம் தோட்டம் தொடங்கி தருமபுரி வரை ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டதாம்.. அப்படி என்ன நடந்தது? இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு இன்று கிடைத்துள்ளது.

Dharmapuri Election 2026

தர்மரியில் அன்புமணியின் மனைவி சௌமியா

அதிமுக - பாஜக கூட்டணியில் 18 தொகுதிகளை பெற்று, அதில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தர்மபுரியில் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தருமபுரி உட்பட அன்புமணியின் வேட்பாளர்களை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் 11 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை நிறுத்தியிருக்கிறார். அதேசமயம், பாமக போட்டியிடும் பென்னாகரம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை களமிறக்கவில்லை ராமதாஸ்.

இதற்கு காரணம், ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமாரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. ஜி.கே.மணி மீது நிறைய கோபம் இருந்தாலும், அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவரது மகனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை ராமதாஸ். மற்ற 6 தொகுதிகளில் சரியான வேட்பாளர்கள் கிடைக்காததால் நிறுத்த முடியவில்லையாம்.

மருமகள் சௌமியா

மருமகள் சௌமியாவை எதிர்த்து வேட்பாளாரை நிறுத்திய ராமதாஸ், மணியின் மகனை வீழ்த்துவத்தில் சடாரென பின் வாங்கிக்கொண்டார்.. ஆனால் அன்புமணி தரப்பு போட்டியிடும் 18-ல் 11 தொகுதியைம் காலி செய்ய வேண்டும் என்று கங்கனம் கட்டியுள்ளாராம் டாக்டர் ஐயா!

யார் ஜெயித்தாலும் சௌமியா ஜெயிக்கக் கூடாது என தர்மபுரியில் உள்ள தனது வன்னியர் சமூகத்தினரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம் ராமதாஸ். அது மட்டுமல்லாமல், சௌமியா தரப்பினர் யார் யாரை எல்லாம் சந்திக்கிறார்கள், என்ன மாதிரி வாக்குறுதிகள் தருகின்றனர் என்பதை தினமும் தனக்கு தகவல் தரச் சொல்லி 4 நபர்களை "ஸ்பை"யாக ராமதாஸ் நியமித்துள்ளதாகவும் பாமக வட்டாரங்கள் சொல்கின்றன.

அன்புமணியின் அரசியல் செல்வாக்கைச் சிதைக்க வேண்டும் என்பதற்காக 18 தொகுதிகளில் 11 இடங்களைக் குறிவைத்து ராமதாஸ் காய் நகர்த்துவது, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

தருமபுரியில் காழ்ப்புணர்ச்சி

ஒருங்கிணைந்த பலத்துடன் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நேரத்தில், தந்தையே மகனின் அரசியல் வாழ்விற்கு முட்டுக்கட்டை போடுவதையும், மருமகளுக்கு எதிராகச் செயல்படுவதையும் நடுநிலைத் தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

"அன்புமணியை எதிர்ப்பதாக இருந்தால் 18 இடங்களிலும் தனது ஆட்களை நிறுத்தி பலத்தைக் காட்டியிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு, மருமகளுக்கு எதிர்ப்பு, ஜி.கே. மணியின் மகனுக்கு ஆதரவு என்கிற டாக்டர் ஐயாவின் நிலைப்பாடு சரியில்லை. தருமபுரியில் மட்டும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதும் சரியல்ல" என்பதே தருமபுரி தொகுதி பாமகவினரின் தற்போதைய ஆதங்கமாக இருக்கிறதாம்..

ராமதாஸின் பிடிவாதம்

இந்த உட்கட்சி மோதலால் பாமக வாக்குகள் சிதறி கட்சியின் வெற்றி வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தந்தை - மகன் இடையிலான இந்த அதிகாரப்போட்டி தொண்டர்களிடையே கடும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மருமகளுக்கு எதிரான ராமதாஸின் பிடிவாதம் தருமபுரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் மாற்றுக் கட்சிகளுக்கு சாதகமான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த உள்ளடி வேலைகளையும் தாண்டி சௌமியா அன்புமணி தருமபுரியைக் கைப்பற்றுவாரா அல்லது ராமதாஸின் வியூகம் வெல்லுமா? என்பதும் மில்லியன் டாலர் எதிர்பார்ப்புதான்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

- எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+