''ஏன்யா.. உங்களுக்கு ஒரு சட்டம்! எங்களுக்கு ஒரு சட்டமா?'' அண்ணாமலை மீது தயாநிதி மாறன் பாய்ச்சல்!
சென்னை: கர்நாடகாவுக்கு யார் செல்ல வேண்டும் யார் செல்லக் கூடாது என அண்ணாமலை முடிவெடுக்க முடியாது எனக் கூறிய தயாநிதி மாறன் எம்.பி., ''ஏன்யா.. உங்களுக்கு ஒரு சட்டம்! எங்களுக்கு ஒரு சட்டமா?'' என தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த மாதம் வரை கர்நாடகாவில் முகாமிட்டு கன்னடத்தில் பேசி பாஜகவுக்கு ஓட்டுக்கேட்டவர் அண்ணாமலை என்றும் அரசியலுக்காக அவர் மேகதாது விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சிக்கிறார் எனவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, மேகதாது அணை பிரச்சனையாக இருந்தாலும் சரி சுமூகமாக பக்குவமாக பேச வேண்டிய விவகாரம் என்றும் அதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதன் மூலம் மக்களுக்கு தான் இழப்பு ஏற்படும் என்பதை அண்ணாமலை சிந்திக்க வேண்டும் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இருப்பவர்களும் விவசாயிகள் தான் இங்கே இருப்பவர்களும் விவசாயிகள் தான் என்றும் அதனால் அரசியலை பின்னுக்கு தள்ளி நல்ல முறையில் இவ்விவகாரத்தை முதல்வர் கையாள்வார் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல மேகதாது அணை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கப் போகிறது என்றும் விவசாயிகள் பிரச்சனையை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் இது தான் சட்டம் எனவும் எடுத்துக்கூறிய தயாநிதி மாறன், ஒரு கட்டத்தில் போதுமா என கேட்டுவிட்டு பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications