எடப்பாடி பழனிசாமி கேட்பது நியாயம்னு நீதிபதிக்கு பட்டால்! எனக்கு ஆட்சேபம் இல்லை! தயாநிதிமாறன்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்ககோரும் காரணங்கள் நியாயமானது என நீதிமன்றம் கருதினால், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதை குறிப்பிட்டு அது இணையதளத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த முறை நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜரானார்.
தொடர்ந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியின் மனுவுக்கு பதில் மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அந்த மனுவில் தனக்கு வயது 70 ஆகிறது என்றும், வயது மூப்பு காரணமாகவும் மருத்தவ காரணங்களால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததால், அவரது கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கின் மீதான விசாரணையை நீதிபதி வரும் 25-ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications