ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனம்! தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலையாக மாறியது எப்படி தெரியுமா?
சென்னை: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று, அவரது நினைவிடத்தில் ஏராளமான கொங்கு அமைப்புகள் மரியாதை செலுத்தி வருகின்றன.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டிய இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று அவர் குறித்த ஒரு சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

தீர்த்தகிரி கவுண்டர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியினருக்கு 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மகனாகப் பிறந்தார் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்று சிறந்து விளங்கினார்.

வரிப் பணம்
கொங்கு நாட்டை மைசூர் மன்னர் ஆட்சி புரிந்ததால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் மன்னருக்குச் சென்றது. இத்தகவலை அறிந்த தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கினார். வரி கொண்டு சென்ற தண்டல்காரர்களிடம் 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை பறித்ததாகச் சொல்' என்று கூறியதால் அன்று முதல் 'சின்னமலை' என்ற பெயர் பெற்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

கோவில் திருப்பணிகள்
திருக்கோவில்களுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டினார். மேலும் தமிழ் புலவர் பெருமக்களையும் ஆதரித்து வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி
தீரன் சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீர தீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலை மற்றும் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications