கையெடுத்து கும்பிட்டு.. பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய்? மேட்டரே வேறயாம்.. பரபர வீடியோ!
சென்னை: நீலாங்கரையில் இன்று காலை வாக்களித்த நடிகர் அங்கு மூதாட்டி ஒருவரை பார்த்து கையெடுத்து கும்பிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுக்க விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தீவிர பாதுகாப்போடு தமிழ்நாடு முழுக்க தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

விஜய்
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை நீலாங்கரையில் வாக்களிக்க இன்று காலை வந்தார். காலை 6.45க்கு வீட்டில் இருந்து கிளம்பிய விஜய் 7 மணி அளவில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து சேர்ந்தார். காரில் வந்த விஜய் அங்கு நேராக சென்று வரிசையில் நின்றார். விஜய்க்கு முன்பாக அங்கு வாக்களிக்க 10 பேர் வரை லைனில் காத்து இருந்தனர். விஜய்யும் அவர்களுக்கு பின்பாக லைனில் நின்றார்.

வரிசையில் நின்றார்
ஆனால் விஜய் லைனில் நிற்பதை பார்த்துவிட்டு அவரை சுற்றி ரசிகர்கள் மொத்தமாக கூடினார்கள். பல நூறு ரசிகர்கள் விஜயை சுற்றி நின்றனர். அதோடு வாக்குச்சாவடிக்கு வெளியிலும் கார், பைக்கில் பல விஜய் ரசிகர்கள் வரிசைகட்டி நின்றனர். இதனால் அந்த வாக்குச்சாவடி திருவிழா போல கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்கு வாக்களிக்க வந்த மற்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

கூட்டம்
இதையடுத்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், நீங்கள் இப்போதே வாக்களித்துவிடுங்கள். வரிசையில் நிற்க நிற்க கூட்டம் அதிகரிக்கும். இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என்று குறிப்பிட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் வரிசையில் நிற்காமல் உள்ளே சென்றார். உள்ளே சென்று வாக்களித்துவிட்டு மக்களுக்கு தொந்தரவு கொடுக்காத விதம் வேகமாக திரும்பி சென்றார். இந்த நிலையில் வாக்குச்சாவடியின் வெளியே வந்த விஜய், தனக்கு வணக்கம் வைத்த மூதாட்டிக்கு பதில் வணக்கம் வைத்தார்.

வணக்கம்
இரண்டு அந்த மூதாட்டியை பார்த்து மிகவும் எளிமையாக கையெடுத்து கும்பிட்டு விஜய் வணக்கம் வைத்தார். ஆனால் சமூக வலைதளங்களில் பொது மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. பொது மக்கள் வாக்களிக்க காத்திருந்த நேரத்தில் அவர்களைத் தாண்டிச் சென்று வாக்களித்து விட்டு வெளியே வந்ததால் விஜய் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை, வணக்கம் மட்டுமே செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான உண்மையான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications