காரணமே வேற.. மீண்டும் "முருகன்".. யாரு நடிகை மீனாவா?.. சபாஷ் பாஜக.. கவனம் ஈர்த்த பிரதமர் மோடி விழா
சென்னை: டெல்லியில் நடந்த பிரதமர் மோடியின் பொங்கல் நிகழ்ச்சிதான், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறகு, தமிழக பாஜகவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த எல்.முருகனின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
எல்.முருகன்: மாநில தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகுதான், பாஜகவின் நடவடிக்கைகளும் துரிதமாயின என்று ஒரு பேச்சு இன்றும் உள்ளது.. காரணம், எல்.முருகன் பதவி ஏற்றபிறகு, நிறைய மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்.. இதில் சில ரவுடிகளும் அடங்குவார்கள். கையில் அரிவாளுடன் அவர்கள் கட்சியில் சேரும் அளவுக்கு பாஜக அவர்களை ஈர்த்திருந்தது போலும்..

வழக்கமாக, தேர்தல் சமயத்தின்போதுதான், நடிகர், நடிகைகள் பலர் அதிமுகவில் வந்திணைவார்கள்.. அதற்கு காரணம், யார் வந்தாலும் அவர்களை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிக சரியாக பயன்படுத்தி கொள்வார்.. பிரச்சாரங்களிலும் அவர்களுக்கு தவறாமல் வாய்ப்பினை வழங்குவார்.
சீனியர்கள்: கிட்டத்தட்ட இதே பாணியைதான், எல்.முருகன் கையிலெடுத்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.. அதனால்தான், திமுகவை சேர்ந்த விபி துரைசாமி, குக செல்வம் போன்ற சீனியர்களை, முருகனால் தன் பக்கம் இழுக்க முடிந்தது.. அந்தவகையில், காங்கிரஸிலிருந்து குஷ்புவை அழைத்து வந்து, தாமரையில் அமர வைத்ததும் எல்.முருகனின் முயற்சியால்தான் என்றும் பேசப்பட்டது.
அதாவது, திராவிட கட்சிகள் செய்யாததை, எல். முருகன் மிக குறுகிய காலத்தில் செய்துவிட்டதாகவும், பாஜகவுக்குள்ளேயே பெருமையாகவே பேசப்பட்டது.
பிரபல நடிகை: எப்போதுமே, வடமாநில பாஜகவை பொறுத்தவரை, மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், அல்லது மக்களிடடையே பிரபலமான நடிகர், நடிகைகளை தேர்தல் சமயத்தில் களமிறக்குவது யுக்திகளில் ஒன்றாக இருந்து வருகிறது.. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பிரபலங்களுக்கு சீட் கொடுத்து, பிரச்சாரத்திலும் அவர்களை ஈடுபடுத்துவது வழக்கமான பாணியாகும்.. இதே யுக்தியைதான் எல்.முருகனும் தமிழகத்தில் கையாண்டதாக தெரிகிறது.
இப்போது விஷயம் என்னவென்றால், மீண்டும் எல்.முருகன் அதே ரூட்டை பிடித்துள்ளாராம். இதுகுறித்துதான் நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்துள்ளது.
மத்திய அமைச்சர் முருகனின் ஏற்பாட்டில் டெல்லியில் பொங்கல் விழா களைகட்டியது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பொங்கலை துவக்கி வைத்தார். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் மோடி. விழாவில் நடந்த தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இந்த விழாவில், நடிகை மீனாவும், தமிழ் சினிமாவின் நடன மாஸ்டர் கலாவும் கலந்து கொண்டனர்.
எல்.முருகன்: பொங்கல் நிகழ்வை, பிரதமர் மோடி துவக்கி வைத்தபோது, அவருக்கு அருகே இருக்கும் அளவுக்கு மீனாவுக்கு முக்கியத்துவம் தந்திருந்தார் எல்.முருகன். விழாவில் பாஜகவை சேர்ந்த பலரும் இருக்க, தமிழகத்தில் அரசியல் செய்து வரும் தமிழக பாஜக உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவை காணவில்லை. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான முருகன், குஷ்புவை அழைக்கவில்லையாம்.
பாஜக உறுப்பினரல்லாத மீனாவை அழைத்தும், பாஜக உறுப்பினரான குஷ்வுவை தவிர்த்தும் முருகன் செய்துள்ள அரசியல் தமிழக பாஜகவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஆச்சரியம்: நடிகை மீனாவை பாஜகவில் சேர்க்கும் முயற்சியில் முருகன் இருக்கிறாரா? என்றும் விவாதிக்கிறார்கள். மொத்தத்தில் குஷ்பு இல்லாமல் மீனா அழைக்கப்பட்டதைத்தான் தமிழக பாஜகவினர் ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறார்கள். என்ன நடக்குமோ? தெரியலையே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications