வேலி தாண்டிய வெள்ளாடு.. தம்பி அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக பருப்பு வேகாது".. கோவையில் பொங்கிய விந்தியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களிலும் பாஜக பருப்பு வேகாது... தமிழகத்தில் பாஜக ஆட்சி மலராது. அண்ணாமலை எண்ணமும் பலிக்காது" என்று நடிகையும், அதிமுகவின் பேச்சாளருமான விந்தியா காட்டமாக கூறியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அபரிமிதமான பாசத்தையும், அன்பையும், மரியாதையையும் வைத்திருந்தவர் நடிகை விந்தியா. அதனால்தான், அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் வரிசையில், முதன்மையான இடத்தை பெற்றார் விந்தியா.

Did Actress Vindhya slams DMK and what did she criticized Tamil nadu BJP Annamalai in Coimbatore Meeting

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அனைத்து தேர்தல்களிலும், தமிழகம் முழுக்க சென்று பிரச்சாரம் மேற்கொண்டார் விந்தியா. ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறி தமிழை பேசியவர், நாளடைவில் சரளமாக பேசும் அளவுக்கு தன்னை உயர்த்தி கொண்டார்.

பெருமைகள்: ஒவ்வொரு பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரங்களிலும், அதிமுக பெருமைகளையும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சி பணிகளையும் புகழ்ந்து பேசும் விந்தியா, அதேசமயம் திமுகவையும் சரமாரியாக விமர்சிக்க தயங்கியதில்லை.

"ஐயோ கொல்றாங்களே, இதுதான் எனக்கு கடைசி தேர்தல்" என்று பரிதாப டிராமா போட்டே வாழ்ந்தவர் கருணாநிதி.. இன்னைக்கு அதே டிராமா போடறார் ஸ்டாலின்.. பேசுவதெல்லாம், சிக்ஸர் ஆட்சி, சூப்பர் ஆட்சி, இரண்டாம் கலைஞர் ஆட்சி என்றுதான் இவங்க பேசுவார்கள்.. ஆனால் செயல்பாட்டில் ஒன்றும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி: எதை கேட்டாலும், கஜானாவில் பணம் இல்லை, நாங்களே கடனில் இருக்கோம் என்கிறார்கள்.. ஆனால், எழுதாத பேனாவுக்கு 80 கோடி செலவு செய்து சிலை வைக்கிறாங்க.. இனியாவது மக்களை காப்பாற்ற அண்ணன் எடப்பாடி ஆட்சி வரணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்" என்று பேசிய விந்தியாவின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலானதை மறுக்க முடியாது.

திமுகவை எப்போதுமே விமர்சிக்கும் விந்தியா, இந்த முறை பாஜக மீது பாய்ந்துள்ளார்.. பாஜகவிற்கு பயந்து பென்சில் வாங்கக்கூட பெரியவர்களை வெளியே அனுப்ப பயப்படுகிறார்கள் என்று விந்தியா தற்போது பேசியுள்ளதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி: புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:

"தொண்டமுத்தூர் எம்எல்ஏவான அண்ணன் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் நல்லா ஆடுவார். மக்களுக்கு பிரச்சினையின்னா ஓடுவார். தொண்டாமுத்தூர் தொகுதி அவரது கோட்டை. அதில் எவனானும் போட முடியாது ஓட்டை... மக்களை டிசைன் டிசைனாக திமுகக்காரர்கள் ஏமாற்றுவார்கள். கேமரா முன் நின்று பேசுவாங்க.. ஆனால், தேர்தல் என்றவுடன் தனித்து நிற்க பயப்படுவாங்க.. ஏனென்றால் திமுகவுக்கு முதுகெலும்பு கிடையாது.

திமுக ஆட்சி: இதுவரை திமுக தனித்து போட்டியிட்டது இல்லை. எங்கள் தலைவர்களையும், தமிழக மக்களை மதிக்கவில்லை என்பதால் பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. மக்களைக காக்க ஆட்சி நடத்தினால் தைரியமாக தேர்தலை சந்திக்கலாம். ஆனால் குடும்பத்திற்காக, மகனுக்காக, மருமகனுக்காக ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார்.

கடந்த 2014-ல் ஜெயலலிதா தனித்து நின்று 37 எம்.பி தொகுதிகளில் வெற்றி பெற்றார். அதே போல 2014-ல் தனித்து நின்று 136 எம்எல்ஏ சீட்டுகளில் வெற்றி பெற்றார். ஒரு கட்சியின் பலம் கூட்டணியோ, அடுத்த கட்சியில் இருந்து வரும் தலைவர்களோ அல்ல. மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, நம்பிக்கை தான்.

நோட்டா: நோட்டாவுக்கு சமமாக இருக்கும் பாஜக, இப்போ ஒரு விளம்பரம் செய்திருக்கிறது.. 17 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தார்கள் என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது.

தம்பி அண்ணாமலை, அந்த 17 பேரையும் பாஜகவில் சேர்த்தற்குப் பதில், முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும். இதனால் பாஜகவிற்கு பயந்து பென்சில் வாங்கக்கூட பெரியவர்களை வெளியே அனுப்ப பொதுமக்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவங்களையும் பிடித்து பாஜகவில் சேர்த்து விடுவாங்கனு பயப்படுறாங்க. அந்த அளவிற்கு பாஜ நிலை தமிழகத்தில் உள்ளது.

பருப்பு வேகாது: தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களிலும் பாஜக பருப்பு வேகாது... தமிழகத்தில் பாஜக ஆட்சி மலராது. அண்ணாமலை எண்ணமும் பலிக்காது" என்று காட்டமாக பேசியிருக்கிறார் விந்தியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+