பிரச்சாரத்துக்கு வர மாட்டார்.. விஜயகாந்த் பற்றி அதிமுகவிற்கு போன மெசேஜ்? மூடப்படும் கூட்டணி கதவுகள்?
சென்னை: தேமுதிக பற்றிய முக்கியமான மெசேஜ் ஒன்று அதிமுக தலைமைக்கு மாஜி அமைச்சர் ஒருவர் மூலமாக சென்றுள்ளதாம் .
தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில்.. பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆகி உள்ளார்.

பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமலதாவை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரேமலதா கையை தூக்கி விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கூட்டணி முறியும்: தேமுதிக பற்றிய முக்கியமான மெசேஜ் ஒன்று அதிமுக தலைமைக்கு மாஜி அமைச்சர் ஒருவர் மூலமாக சென்றுள்ளதாம் . அதன்படி தேமுதிகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர்.. அதிமுக மாஜியிடம் நெருக்கமாக உள்ளார். அவரிடம் பேசுகையில்.. இனி விஜயகாந்த் பெரிதாக பொது மேடைகளுக்கு வர மாட்டார்.
உடல்நிலை மோசமாகி விட்டதால்.. அவர் இனி வரும் காலங்களில் ஓய்வு எடுப்பார். அரசியல் நிகழ்வு, சினிமா நிகழ்வு எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பிரச்சாரத்திற்கு வர மாட்டார்.
அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவர் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் அதிகம் உள்ளது. அதனால் இனி அவர் வீட்டிலேயே ஓய்வு எடுப்பார், என்ற மெசேஜை கூறியுள்ளாராம். இதையடுத்தே அதிமுக முக்கியமான முடிவு ஒன்றிற்கு வந்துள்ளதாம்.
கூட்டணி கதவுகள் மூடல்; தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அவர்களுக்கான கூட்டணி கதவை அதிமுக மொத்தமாக மூடும் என்கிறார்கள். தேமுதிக வாக்கு வங்கியும் கடந்த தேர்தல்களில் 5 சதவிகிதம் என்பதில் இருந்து குறைந்து 1 சதவிகிதம் வரை வந்துள்ளது. தேமுதிகவின் முகமே விஜயகாந்த்தான் . அவரே கட்சியில் இருந்து ஓரம்கப்பட்டுவிட்டார். அப்படி இருக்க.. அவர் இல்லாமல் தேமுதிக எப்படி இடங்களை வெல்ல முடியும், பிரச்சாரம் செய்ய முடியும்.
அதனால் இனி தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதை மனதில் வைத்தே தேமுதிகவிற்கான அதிமுகவின் கூட்டணி கதவை மொத்தமாக மூட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழைய கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. இதில் தேமுதிக இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது.
தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதன்பின் அமமுகவுடனும் தேமுதிக கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து தேமுதிக எந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தது. பெரிதாக அரசியல் லைம்லைட்டிலும் தேமுதிக இல்லை. இனி இந்த அதிமுக - தேமுதிக கூட்டணி உருவாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications