வார்த்தை விட்ட அமித் ஷா.. வாய் விட்ட மோடி.. இதோ வந்தாச்சு கெடு.. இன்னும் ஒரே வாரம்! விழிக்குது பாஜக
சென்னை: தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும் அமித் ஷாவும், இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியபோது, "புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று சொல்லியிருக்கிறார்.. அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசியிருக்கிறார்.. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருக்கிறார்.
சந்தர்ப்பவாதி: இங்கே தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி பேசும் மோடி, பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார்... இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாஜக தமிழகத்தில் இருக்கவே வாய்ப்பு கிடையாது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால், பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.
கும்பகர்ணன்: வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ-யுடன் இப்போது தேர்தல் ஆணையமும் இணைந்து மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது. அதனால் தான் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டு கொள்ளாமல், கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது.
மோடி, அமித்ஷா 2 பேரும் தமிழர்களை பற்றி இழிவாக பேசியிருக்கிறார்கள்.. ஒரு கண்டனத்தையாவது தமிழக பாஜகவினர் சொல்லியிருக்கிறார்களா? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே, ஏகப்பட்ட அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. மாவட்டந்தோறும் பயணித்து நிர்வாகிகளை சந்தித்து பேசிவருவதுடன், பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.. தினந்தோறும் பாஜகவை குறைகூறி அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.
பரபரப்பு: இப்போது, ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
இதே போல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் கடும் கண்டனத்தை பாஜகவுக்கு தெரிவித்துள்ளார். :தமிழ்நாட்டிற்கு ஒன்பது முறை வந்து பிரச்சாரம் செய்தபோது தமிழ்மொழி, தமிழர்கள் பற்றியெல்லாம் உச்சிமேல் மெச்சி பேசிய பிரதமர் மோடி. இப்போது இப்படி ஒரு கேலிக் கூத்தான குற்றச்சாட்டைக் கூறுவது அவரிடம் ஆக்கப்பூர்வ திட்டங்கள் குறித்து பேச ஏதுமில்லை. 'மோடி கீ கியாரண்டி' சாயம் வெளுத்துவிட்டது. எனவே, இப்படி நாலாந்தரப் பேச்சாளர் நிலைக்கு ஒரு பிரதமர் இறங்கிவிட்டார்" என்று விமர்சித்திருக்கிறார் வீரமணி.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications