"அது" மட்டும் வேணாமே.. அன்புமணி சொன்னதுமே.. சட்டென மலர்ந்த விஜய் முகம்.. ஓஹோ, தொட்டதெல்லாம் துலங்குதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவுடன் விஜய் இணைய போவதாக தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்க, அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணியின் பிறந்தநாளில் அவரை தொடர்பு கொண்டு, வாழ்த்துகள் தெரிவித்தார் நடிகர் விஜய். வாழ்த்து தெரிவித்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Did Anbumani Ramadoss talk with Actor Vijay and what are the PMKs Master Plans

பாமகவுடன் விஜய் கூட்டணி வைப்பார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் ரெக்கைக் கட்டி பறந்தன. உண்மையில் இதன் பின்னணி என்ன என்று விஜய் இயக்கத்தினர் தரப்பில் நாம் விசாரித்தபோது சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

விஜய் அரசியல்: "நாடாளுமன்ற தேர்தலுக்கு விஜய் அரசியலுக்கு வரவில்லை. அவரது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான். அதற்கான, கட்டமைப்புகளைத் தான் சரியாகவும், வலிமையாகவும் உருவாக்கி வருகிறார். அந்த பணிகள் தான் ஒவ்வொன்றாக நடக்கிறது. ஒரு பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமானால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகால திட்டமிடலாவது அவசியம்.

50 ஆண்டுகாலமாக அரசியலில் பயணிக்கும் திமுக, அதிமுக கட்சிகளே, தேர்தலை எதிர்கொள்ள 10 மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன. அப்படியிருக்கையில், புதிய அரசியல் கட்சியைத் துவக்கி அரசியலில் குதிக்க நினைக்கும் விஜய்க்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகாலமாவது தேவைப்படாதா? அதனால்தான், இப்போதே தேர்தலுக்கான கட்டமைப்பை ஒவ்வொரு கோணத்தில் உருவாக்கி வருகிறார்.

பாமக தலைவர்: மேலும், நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே தனது கட்சியின் பெயரை அறிவிப்பார். அதற்கு முன்னதாக எந்த அறிவிப்பும் வராது. பாமக அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. அதாவது, சிறுத்தைகள் தலைவர் திருமாவுக்கு அவரது பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்தார். இதனை தலித் சமூகமும் சிறுத்தைகளும் பாசிட்டிவ்வாக கொண்டாடியது. இந்த சம்பவம், தலித் சமூகத்துக்கானவர் என்ற இமேஜை உருவாக்குவதாக அவருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு சமூக கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை உணர்ந்த விஜய், வன்னியர் சமூக தலைவரான அன்புமணிக்கு எப்போது பிறந்தநாள் என கடந்த ஆகஸ்ட் மாதமே விசாரித்து வைத்திருந்தார். அதன்படி, அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அன்புமணி: எல்லா சமூகமும், சமூகத் தலைவர்களும் எனக்கு ஒன்றுதான். எல்லோர் மீதும் எனக்கு மரியாதை உண்டு என நிரூபிக்கவே அன்புமணிக்கு வாழ்த்து சொன்னார் விஜய். அதனால் சாதி, மத கட்டமைப்புக்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் விஜய்" என்று விவரிக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இதுஒருபக்கமிருந்தாலும், தனக்கு வாழ்த்துத் தெரிவித்த விஜய்க்கு, தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாராம் அன்புமணி ராமதாஸ்.. அப்போது சில விஷயங்களையும் விஜய்யிடம் வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

குறிப்பாக, "உங்கள் அரசியல் பணிகளை நான் கவனிக்கிறேன். ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக எடுத்து வைப்பது புரிகிறது. உங்களிடம் ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன்.

சிகரெட்: அதாவது, நீங்கள் சிறந்த நடிகர். உங்களின் வசனங்களும் ஆக்சன்களும் பொது வெளியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதனால், சிகரெட் பிடிக்கும் காட்சிகளையும், மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தால் ஆரோக்கியமான இளைஞர் சமூகம் உருவாகும் என அட்வைஸ் செய்திருக்கிறார் அன்புமணி. அதற்கு, படிப்படியாக குறைத்து விடுகிறேன் என சொல்லியிருக்கிறார் விஜய்" என்று விவரிக்கிறது பாமக வட்டாராம்.

"எல்லா சமூகமும், சமூகத் தலைவர்களும் தனக்கு ஒன்றுதான். எல்லோர் மீதும் தனக்கு மரியாதை உண்டு என நிரூபிக்கவே அன்புமணிக்கு வாழ்த்து சொன்னாராம் விஜய்... அப்படியானால், விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதர் அன்று இல்லாவிட்டால், இன்று விஜய் என்ற மிகப்பெரிய நடிகர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க மாட்டாரே? தேமுதிக தலைவரின் பிறந்தநாளுக்கு ஏன் விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்ற கேள்வியும் தொத்தி நிற்கவே செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+