நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை! ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு இது தெரியாது: யார் பாருங்க
சென்னை: விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக அறிந்திருக்க வாய்ப்பில்லை" என்று தமிழக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை உரையாற்றியிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை குறிப்பாக மறைந்த இந்திரா காந்தி குறித்து கூறியிருந்தார்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற நிலை வந்த போது, ஜனநாயகத்துக்கு விரோதமாக நெருக்கடி நிலையை 1975ல் அறிவித்து, சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேரை கைது செய்து சிறையிலடைத்தார்.
திருத்தங்கள்: அரசியலமைப்புச் சட்டத்தில் சுமார் 75க்கும் அதிகமான திருத்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ் கட்சி. அவற்றில் பெரும்பாலானவை, நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு, சர்வாதிகாரம் வழங்கியவை.
ஆனால், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கொண்டு வந்த 8 திருத்தங்களும், பட்டியல் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு காலத்தை அதிகப்படுத்தியது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என அனைத்தும் சமூக நீதி சார்ந்தவை. இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசக் கூடாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும்" என்று கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை: இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலும் தேசிய ஒற்றுமை பயணங்களை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி, பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்காக குரல் கொடுத்து மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற தலைவர் ராகுல்காந்தி மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இன்று பொறுப்பேற்பது நாட்டு மக்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அடக்குமுறை: கடந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டுகால நரேந்திர மோடியின் மக்கள் விரோத, பாசிச, அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து தமது பரப்புரையின் மூலம் மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்டவர் ராகுல்காந்தி. அவரது பரப்புரையின் காரணமாக பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி நியாயம் கேட்டவர் ராகுல்காந்தி.
அவரது பரப்புரையின் காரணமாக பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று அரசமைப்புச் சட்டத்தின்படி பாராளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கிற எதிர்கட்சித் தலைவர் என்ற பதவியை முதன்முறையாக தலைவர்ராகுல்காந்தி பெற இருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். ராகுல்காந்தி நியமனத்தை தமிழ்நாடு வரவேற்று மகிழ்கிறது.
அண்ணாமலை: நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியிருக்கிறார்.
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படிதான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார்.
முளைத்த காளான்: எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications