Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலைக்காகவே ஷ்பெஷல்.. பட்டிலியன வசந்தி அக்கா வீட்டில்.. "அந்த சாம்பாரை ஊத்துங்க".. வாவ் துடியலூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு இன்னும் 2 நாளே உள்ள நிலையில், பாஜகவின் பிரச்சாரம் படுமும்முரமாகி கொண்டிருக்கிறது. அதிலும் கோவை பாஜக வேட்பாளரின் வீடியோவை, பாஜகவினர் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.. இதனால் தேசிய அளவில் கோவை தொகுதியானது கவனத்தை பெற்று வருகிறது. பிரச்சாரத்துக்கு செல்லுமிடமெல்லாம் திமுகவை டேமேஜ் செய்துகொண்டே, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தபடியே வருகிறார் அண்ணாமலை.

Did Annamalai eats in schedule caste Woman house in Coimbatore and what happened in Thudiyalur Campaign

துடியலூர்: இப்படித்தான் நேற்றைய தினமும் துடியலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுவந்தார்.. அப்போது, டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அண்ணாமலை.. 20 அடி உயரமுள்ள மாலை கிரேனில் கொண்டுவந்து அணிவிக்கப்பட்டது.

பிறகு, அங்கிருந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஆனந்தி என்பவரது வீட்டிற்கு சென்று உணவு அருந்தினார்.. தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி இனிப்புகள், சாம்பார், சாப்பாடு போன்றவை சமைக்கப்பட்டிருந்தன.. அத்துடன், சுடச்சுட கேழ்வரகு களி சமைக்கப்பட்டது.. அந்த வீட்லிருந்த நபர்களுடன் சேர்ந்து அண்ணாமலை உணவு சாப்பிட்டார்.

வாழையிலை: அண்ணாமலை உட்பட அனைவருமே தரையில் உட்கார, அவர்களுக்கு வாழையிலையில் உணவு பரிமாறப்பட்டது.. பிறகு அந்த பகுதி மக்களிடம், தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திவிட்டு சென்றார்.

இப்படித்தான், கடந்த முறை தேர்தலின்போது, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டபோதும், பலதரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.. அங்கிருந்த அருந்ததியர் காலனியில் ஓட்டு சேகரிக்க சென்றபோது, கார்த்திகா என்ற சிறுமி, "பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்டி இருக்கிறோம். எங்கள் வீட்டிற்கு எல்லாம் வருவீர்களா?" என்று கேட்டார்.

கார்த்திகா: உடனே அண்ணாமலை, "கண்டிப்பாக வர்றேன், ஒரு நாள் தங்கிட்டே போகிறேன்" என்று சொன்னார். அதன்படியே, அருந்ததியர் காலனியில், கார்த்திகாவின் வீட்டில் தங்கினார்... இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அங்கேயே தூங்கி எழுந்தார்... அவரது வீட்டு கிச்சனுக்கே சென்று டீ போட்டு தந்தார்.. காலையில் அந்த பகுதி மக்களிடம் கலகலப்பாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

இந்த சம்பவம் அப்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. தற்போது நேற்றைய தினம் பட்டியலின சமூக ஆனந்தி வீட்டில், சாப்பிட்ட வீடியோவை பாஜகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

பிரச்சாரம்: இதுபோலவே, திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெற தீவிரமாகி வருகிறார்கள்.. தூத்துக்குடியில், திமுக எம்பி கனிமொழி எம்பிக்காக பிரச்சாரம் செய்ய வந்திருந்தபோது, முதல்வர் ஸ்டாலின் மீனவர் வீட்டில் டீ குடித்துவிட்டு சென்றார்.

லயன்ஸ் டவுன் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றபோது, மீனவர் சூசை வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அப்போது, சூசை வீட்டில் டீ குடித்தவாறே, அவர்களிடம் வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.. அவர்களிடம் பேசும்போது, "கனிமொழி, எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை.. அவரை மறந்துடாதீங்க.. வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+