அசத்தலான தமிழ்நாடு.. ஒரே நாளில் வியப்பூட்டி.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. அண்ணாமலை வேற.. அடடடா
சென்னை: தமிழகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த, மக்களவை தேர்தல் நேற்றைய தினம், சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.. பரபரப்புகளும், அதிருப்திகளும், ஆச்சரியங்களும், மரணங்களும் என ஒட்டுமொத்த கலவை உணர்வுடன் நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் ஒருசில நிகழ்வுகளை பார்க்கலாம்..!!
இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவை எதிர்நோக்கி, தேர்தல் ஆணையமும், தமிழக அரசும், பல்வேறு அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.

பரபரப்பு: அனைவருமே ஓட்டுப்போட வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுப்பு, சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள், சிறப்பு மெட்ரோ ரயில் போன்றவை அறிவிக்கப்பட்டன. வயதானவர்கள், மாற்று திறனாளிகளுக்கு நேரடியாகவே வந்து அழைத்து செல்ல வாகன ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன.
அதேபோல, வாக்காளர்கள் சில அதிருப்திகளுக்கும் ஆளானார்கள்.. கையில் வாக்காளர் பெயர் வாக்காளர் அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலைமை சிலருக்கு ஏற்பட்டுள்ளது..
தம்பதிகள்: ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு இருக்கு, ஆனால் மனைவிக்கு ஓட்டு இல்லை என்று வாக்குச்சாவடிகளில் பிரச்சனை வந்துள்ளது.. எனவே, வாக்களிக்க வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.. அதேபோல, கணவர் மனைவி இருவருக்குமே வேறு வேறு வாக்குச்சாவடிகளில் பெயர் பட்டியல் இருப்பதால் அவர்களும் வாக்களிக்க மிகவும் சிரமப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஒருவர் 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்துகொண்டு, வெளிநாட்டிலிருந்து சென்னையில் வாக்களிக்க வந்திருந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை.. எனவே, அவரால் வாக்களிக்கவும் முடியாமல் போய்விட்டது.. தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டால் முறையாக பதில் சொல்லவில்லையாம்.. இப்படி பொதுமக்கள் முதல் நடிகர் வரை வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய நிகழ்வும் நேற்றைய தினம் நடந்துள்ளது..
குமுறல்: "அடுத்த முறையாவது நாங்கள் ஓட்டுப்போடும்படி நடவடிக்கை எடுங்கள்" என்று குமுறி சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் இந்த வாக்காளர்கள்..
சென்னை எழும்பூரில், ரெட்கிராஸ் தெருவில், குயின்ஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரேம் கல்லட் என்பவர் வசித்து வருகிறார். இவரை சார்ந்த, கேரளாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இதே அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள்.. எத்திராஜ் கல்லுாரியில் ஓட்டுப்போட போனால், வெறும் 6 பெயர் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இருந்ததாம்.. இவர்கள் அனைவரது பெயர்களும் நீக்கப்பட்டிருந்ததால், யாருமே ஓட்டுப்பதிவு செய்ய முடியவில்லை.
லிஸ்ட் பெயர்: அதாவது, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறதாம்.. கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு செய்துள்ள அக்குடும்பத்தினரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்து, இப்போது கோர்ட்டுக்கு போக போகிறார்களாம்.
இந்தி பெயர்: அதேபோல, ஆதம்பாக்கம் சுரேந்தர் நகர், 6வது தெருவைச் சேர்ந்த தம்பதி, டிஏவி வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட போனார்கள்.. ஆனால், வாக்காளர் பட்டியலில், கணவரின் பெயர் ஹிந்தியில் இருந்ததாம்.. இதனால் பூத் முகவர்கள், அவரை ஓட்டளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் தேர்தல் அலுவலரிடமே சென்று முறையிட்டு, இது மிகப்பெரிய வாக்குவாதத்தை ஆதம்பாக்கத்தில் ஏற்படுத்திவிட்டது.
அதேபோல, கொடுங்கையூரை சேர்ந்த அப்துல் கரீம் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ஓட்டுப்போட போனால், குடும்பத்தில் 11 பேருக்கு ஓட்டு இல்லையாம்..
தாமதம்: ஆங்காங்கே வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாகவும், வாக்குப்பதிவு தாமதமாகிவிட்டது.. ஆனால், தமிழகத்தில் 11 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாக புகார் வந்தநிலையில், அவையெல்லாம் உடனடியாக சரி செய்யப்பட்டன என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் தந்திருந்ததையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
2 பேர் மரணம்: வாக்குப்பதிவு தினத்தன்று, வெப்ப அலை அதிகமாகவே வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஓட்டு போடச்சென்ற சின்னபொன்னு 77 வயது, பழனிசாமி 65 வயது, இருவருமே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்கள்.... சேலம், ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதால், வயதான இருவருமே வெயில் பாதிப்பால் உயிரிழந்தனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், மாவட்ட சுகாதார அலுவலர்கள் இதை விசாரித்து வருகின்றனர்.
வேங்கைவயல்: குடிநீரில் மலம் கழிந்த விவகாரத்தில் இதுவரை யாரையுமே கைது செய்யாதது ஏன்? என்று கேட்டு, புதுக்கோட்டை வேங்கைவயல், இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்..
சாயங்காலம்வரை ஓட்டுப்போடவும் செல்லவில்லை.. இறுதியில் பதறிப்போன அதிகாரிகள், கிராம மக்களிடம் சமாதானம் பேசி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி தந்ததையடுத்து, கிராம மக்கள் பிடிவாதத்தை தளர்த்தி, ஓட்டுப்போடுவதற்காக, பூத் நோக்கி சென்றார்கள்..
அதேபோல, 100 வயது தாண்டிய முதியோர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு செலுத்திவிட்டு சென்றார்கள்.. உடல்நிலை, வெப்பநிலை எதையுமே பொருட்படுத்தாமல், தங்கள் ஜனநாயக கடமையாற்றிவிட்டு சென்றது காண்போரை ஈர்த்திருந்தது.. அதுபோலவே, முதல்முறையாக ஓட்டுப்போடும் இளைஞர்களும், மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள்.. வாக்கு பதிவு செய்தது, தங்களுக்கு புது அனுபவமாகவும், பெருமையாகவும் இருப்பதாககூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
3 தோழிகள்: ஈரோட்டில் 3 தோழிகள் வந்திருந்தார்கள்.. 3 பேருமே முதல்முறையாக ஓட்டுப்போடுபவர்கள்.. 3 பேருமே புது டிரஸ் அணிந்து வந்திருந்தார்கள்.. இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த தோழிகள், "வேற்றுமையில் ஒற்றுமையை" எடுத்துரைக்கவே ஒன்றாக கிளம்பி வந்து ஓட்டுப்பதிவு செய்ததாக கூறி, அங்கிருந்தவர்களை புல்லரிக்க வைத்துவிட்டார்கள்.
அதேபோல, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் வசிக்கும், 61 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்திருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாருமே, தங்கள் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள்.. இந்த மனநல காப்பகத்திலேயே தங்கியிருந்து தோட்ட வேலை, சுயதொழில் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்..
மனநலம்: இதில், பூரணமாக குணமடைந்தவர்களுக்கு, கடந்த 2019, 2021 தேர்தலின்போதே வாக்காளர் அடையாள அட்டை தந்துவிட்டார்கள்... இந்த மனநல காப்பகத்திலிருக்கும் 740 பேரில், 61 பேர் குணமடைந்துவிட்டனர்.. இதில், 36 ஆண்கள், 25 பெண்கள் ஆவர்.. இவர்கள் அனைவருமே நேற்று ஓட்டுப்போட்டார்கள்... ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறையை சொல்லி, எப்படி ஓட்டுப்போட வேண்டும் என்றும் அதிகாரிகள் இவர்களுக்கு விளக்கியிருக்கிறார்கள்..
புகார்கள்: வழக்கமாக, தேர்தல் நாளில் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடிநின்றாலே, அது விதிமீறலாக கருதப்படும்.. அதாவது பணம் வினியோகம் செய்வதாக, மாற்று கட்சியினர் போலீசில் புகார் சொல்வார்கள்.. போலீசாரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்.. அந்தவகையில், நேற்றைய தினமும் பல ஓட்டுச்சாவடிகளிலிருந்து புகார்கள் போலீசுக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குச்சாவடிகளுக்கு பலபேர் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர்.. இதில் ஓட்டுப்போடுவதற்காக, பெற்றோர்கள் மட்டும் வரிசையில் நின்றிருக்க, அவர்களது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக விளையாடுவதை பார்க்க முடிந்தது.. அதிலும் தங்களது பெற்றோர்களின் செல்போனை வாங்கி, நிறைய பிள்ளைகள் கேம் விளையாடி, செல்போனிலேயே மூழ்கி கொண்டிருந்தார்கள்.
மொத்தத்தில், நேற்றைய தினம் தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வரை அனைவருமே கருத்து தெரிவித்திருந்தனர்.
அண்ணாமலை: ஆனால், தமிழக பாஜக மட்டும் புகார்களை அடுக்கியிருக்கிறது. கோவையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் இல்லை என்று அண்ணாமலை பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்..
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 20 பெயர்கள் இல்லை... உயிரோடு இருப்பவர்களின் ஓட்டுகள் இல்லை.. இறந்த கணவருக்கு ஓட்டு இருக்கிறது, உயிரோடு இருக்கும் மனைவிக்கு ஓட்டு இல்லை.., இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.. அதனால் மறுவாக்குப்பதிவு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதால், தேர்தல் முடிந்தும், தமிழக அரசியலில் அனல் அடித்து கொண்டிருக்கிறது..!!
-
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications