Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவை விமர்சித்தது யாருன்னு பாருங்க.. அசையும் அஸ்திவாரம்.. அண்ணாமலை எதிர்பார்க்கலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸுக்கும், தமிழக பாஜகவுக்கும் வார்த்தை போர் முற்றி வருவது, பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசும்போது, பூரி ஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறை சாவி தொலைந்து போய்விட்டதாகவும், அது தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விமர்சித்திருந்தார். ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியனை மறைமுகமாக கூறி இவ்வாறு விமர்சித்திருந்தார் பிரதமர்.

Did BJP Annamalai reply to the Congress and what did TN Leader Selvaperunthagai criticize Tamil Nadu BJP Office

அதேபோல, தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருப்பதாக கூறி தமிழக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

கி.வீரமணி: "தமிழர்களை திருடர்கள் என்று மோடி விமர்சிப்பதா? ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்..

தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தும் உரிமையை யார் பிரதமர் மோடிக்குத் தந்தது? உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் மோடி என்று மூத்த தலைவர் ஜவாஹிருல்லா கொந்தளித்துள்ளார்.

உள்துறை அமைச்சர்: இதில், தமிழக காங்கிரஸ் கட்சி உச்சக்கட்ட ஆவேசமாகியிருக்கிறது.. நேற்றைய தினம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து கூறும்போது, "உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி , இருவருமே இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், தமிழக பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தினார் செல்வப்பெருந்தகை.

உடனே இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்து பதிலடியை தந்திருந்தார். "பாஜக அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்" என்றார்.. இப்போது அண்ணாமலைக்கு, செல்வப்பெருந்தகை மறுபடியும் ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.

கடும் கோபம்: தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன்.

ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.

ஒரே ஒருவர்: ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்க போவதில்லை.. ஏனென்றால் கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை பாஜக அலுவலகத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம்.

முறைகேடுகள்: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று செல்வப்பெருந்தகை அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே, பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. தமிழகம் முழுவதும், மாவட்டந்தோறும் பயணித்து காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசிவருவதுடன், பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.. அத்துடன், பாஜகவையும் குறைகளை கூறி, தினம் தினம் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.

பதிலடிகள்: இப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அண்ணாமலை தந்த பதிலடியை கொண்டு, அவருக்கே மீண்டும் செல்வப்பெருந்தகை தந்திருக்கும் பதிலடி அதற்கு மேல்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+