"ஜெயிலுக்கு" போகப்போறார் வேலுமணி.. ஸ்டிரைட்டா கோவையிலேயே எகிறிய கே.என் நேரு.. ஹைகோர்ட் மேஜர் உத்தரவு

கே.என் நேரு மீதான அவதூறு வழக்கை ரத்து செய்துள்ளது சென்னை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த கால அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே, அப்போதைய அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வந்தது திமுக.. சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில்கூட, இந்த விமர்சனங்கள் அதிகமாகவே எதிரொலித்தது.

திமுக ஆட்சி அமைந்ததும், ஊழல் புரிந்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் சிறை செல்வது உறுதி என்று ஸ்டாலினும் தன்னுடைய பிரச்சாரங்களில் பேசி வந்தார்.

 எரிச்சல் - கோபம்

எரிச்சல் - கோபம்

கொங்குவின் சீனியர் தலைவரான எஸ்.பி.வேலுமணி மீது, திமுகவின் மொத்த கோபமும் அப்போது திரும்பியிருந்ததை மறுக்க முடியாது.. அந்தவகையில்தான், தற்போதைய திமுக அமைச்சரான கே.என்.நேருவும் காட்டமான ஒரு அறிக்கையை அந்த சமயம் வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையானது ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

 சலாம் & சசிகலா

சலாம் & சசிகலா

"கோவையில் சசிகலா உறவினர் ராவணனுக்கு" கால் கழுவி, சென்னையில் "சசிகலாவிற்கு சலாம்" போட்டு - அமைச்சர் பதவியை "காக்காய் பிடித்து" வாங்கிக் கொண்டு, இன்றைக்கு உள்ளாட்சித் துறையை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி "குறை குடம் கூத்தாடும்" என்பது போல் ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.. "சிறைக்குச் செல்லும் நாள் நெருங்கி விட்டது" என்ற பீதியில் "சில்லறைப் புத்தியுடன்" "சிறுமதியுடன்" அறிக்கை என்ற பெயரில் ஒரு "உளறலை" " போக்கிரித்தனமான எண்ணவோட்டங்களை" வெளியிட்டிருப்பது அவரது அறியாமையை க்காட்டுகிறது.

 பூனை கண்ணை..

பூனை கண்ணை..

அடிக்கின்ற கொள்ளையில் - கொரோனாவின் தாக்கத்தையே மறந்து விட்டு - பூனை கண்ணை மூடிக் கொண்டது போன்ற மனநிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் திரு வேலுமணி" என்பது உட்பட பல்வேறு காட்டமான விமர்சனங்களை நேரு அந்த அறிக்கையில் பதிவிட்டிருந்தார். நேருவின் இவ்வளவு காட்டமான அறிக்கைக்கு காரணம் என்ன? ஏன் வேலுமணி மட்டுமே குறிவைக்கப்படுகிறார் என்றுகூட அப்போது சலசலப்புகள் எழுந்தன.. அதற்கு சில காரணமும் சொல்லப்பட்டன.

 ஐடி விங்

ஐடி விங்

அந்த சமயத்தில், வேலுமணியின் கோவை மாவட்டத்தில் உள்ள திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்... கொரோனா காலத்தில் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதால் அவர்களை சென்று அவர்களின் குடும்பத்தினர் பார்க்க கூட முடியாத சூழல் ஏற்பட்டது.. அதுமட்டுமல்ல, அவர்களை ஜாமீனில் எடுக்கும் பணியிலும் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திமுகவில் சுறுசுறுப்பாக இருக்கும் ஐடி விங்க் நிர்வாகிகளை காலி செய்யும் திட்டத்துடன் அதிமுக செயல்படுவதாகவும், இதற்கெல்லாம் பின்னணியில் வேலுமணி இருப்பதாகவும் திமுக நம்பியது.. அதனால்தான், வேலுமணி மீது கடுமையான கோபத்தில் திமுக தலைவர்கள் இருந்தனர்.

 11 மாதங்களே

11 மாதங்களே

இந்நிலையில், கேஎன் நேரு மீது புகார் ஒன்று கிளம்பியது.. திமுக முதன்மைச் செயலாளரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, கடந்த 2020ம் ஆண்டு கோவையில் பேசியபோது, இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் வேலுமணி கோவை சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார்.. இது அமைச்சரின் பணி குறித்து களங்கம் கற்பித்ததாக கூறி, நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நேரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 நீதிபதி உத்தரவு

நீதிபதி உத்தரவு

இந்த மனுவை இன்று நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.. அப்போது, நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறுத்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை எனவும், வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி, அமைச்சர் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளந்திரையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+