Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விபச்சாரி மகன்".. ஆ.ராசா பற்ற வைத்த நெருப்பு.. மேலிடம் வரை பறந்த "கங்கு".. சீறும் பாஜக.. விவாதம்

ஆ ராசாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் என பாஜக கேட்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா பேசிய பேச்சு, இணையத்தில் விவாதங்களாக வெடித்து கிளம்பி உள்ளன.. மற்றொருபுறம், ஏகப்பட்ட ஆத்திரத்தில் பாஜக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.

முன்னாள் அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக இருக்கும்.. உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும்.

அதிலும் பெரியார் பற்றி இவர் பேசும் பேச்சுக்கள் அனைவரையும் ஈர்த்துவிடும்.. இந்துத்துத்துவாவுக்கு எதிராக, முழு தரவுகளுடன் பொதுமேடையில் ஆ.ராசாவைக்கும் வாதம், டெல்லியையே திரும்பி பார்க்க செய்துவிடும்.

 டென்ஷன் ராமதாஸ்

டென்ஷன் ராமதாஸ்

சில சமயம், ராசாவின் பேச்சுக்கள் சர்ச்சையை தாங்கியும் வலம்வரும்.. இப்படித்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் வளர்ந்த விதத்தை பற்றி விமர்சித்த ராசாவின் பேச்சு, மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. ஒரு மாநில முதல்வரின் பிறப்பையும், அவரது அம்மாவையும் அவதூறாக பேசுவதா? என்று டாக்டர் ராமதாஸ் ஆவேசமானார்.. ஆனால், இதற்கு ஆ.ராசாவே ஒரு விளக்கம் தந்திருந்தார்.. தான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் தவறாக சித்தரித்துவிட்டனர் என்று கூறியிருந்தார்.. அதற்கு பிறகு, தனித்தமிழ்நாடு குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது..

அமித்ஷா

அமித்ஷா

இதற்கு காரணம், அந்த மேடையிலேயே அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அந்த கோரிக்கையை ராசா விடுத்திருந்தார்.. "பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.

"மாட்டுக்கறி"

"மாட்டுக்கறி சாப்பிடற எல்லா நாட்டு பிரதமரையும் அவர் கட்டிப்பிடிக்கிறார்... ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தைரியம் இருந்தால், மோகன் பகவத்துக்கு தைரியம் இருந்தால், மோடிக்கு தைரியம் இருந்தால், அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால், முஸ்லிம்களை தவிர்த்து மாட்டுக்கறி சாப்பிடுகின்ற யாரும் இந்துக்கள் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று ராசா கேட்ட கேள்வி, பாஜக உள்ளிட்ட இந்துமத ஆதரவாளர்களை கொந்தளிக்கவே செய்தது.

விபச்சாரி

விபச்சாரி

இப்போதும் ஒரு கருத்தை பேசியுள்ளார் ஆ.ராசா.. இந்த வீடியோ, மாநில தலைவர் அண்ணாமலையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.. "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று ராசா பேசியிருக்கிறார்.

 நிறம் மாறுமோ?

நிறம் மாறுமோ?

இதைதான் பாஜக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது.. திமுகவை சேர்ந்த எம்பி ராசா, ஒரு சமூகத்தை தவறாக பேசி, மற்றவர்களை திருப்திப்படுவதற்காக பேசி கொண்டிருக்கிறார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இத்தகைய தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அண்ணாமலை வெடித்து பொங்கினார். மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என்று பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஹிந்துக்கள் + துவேஷம்

ஹிந்துக்கள் + துவேஷம்

இப்படிப்பட்ட சூழலில், ஆ.ராசாவின் பேச்சு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. இந்துக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வன்மத்தை கக்குவது சரியா? திராவிட மாடல் என்றால், இந்துக்களுக்கும் பொருந்தாதா? இவர் தவறாக பேசும் இந்துக்களின் வாக்குகள் திமுகவிற்கு வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் சொல்ல தயாராக இருக்கிறாரா? ஏற்கனவே, பலமுறை சர்ச்சையாக ஆ.ராசா பேசிய நிலையில், ஒருமுறைகூட முதல்வர் ஸ்டாலின், அவரை கண்டித்ததாக தெரியவில்லை.. மாநில முதல்வர் என்றும் பாராமல், அவரை மேடையில் வைத்துக் கொண்டே மிரட்டல் விடுக்கும் ராசா மீது என்ன நடவடிக்கை? இப்போது பேசியிள்ள அவதூறு குறித்து, ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? என்ற பல கேள்விகளை நெட்டிசன்கள் முன்வைத்து வருகிறார்கள்.

 எங்கே ஆ ராசா

எங்கே ஆ ராசா

மற்றொருபுறம் ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆதரவுகள் கூடி வருகின்றன.. ராசா பேசியதில் என்ன தப்பு? இருப்பதைதானே சொல்கிறார்.. ஆதாரத்தோடுதான் பேசுகிறார்.. ஒருவேளை ராசா பேசியவது தவறு என்றால், பதில் ஆதாரங்களுடன் மறுமொழி சொல்ல வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு விளக்கம் கேட்டால் என்ன நியாயம்? இது அனைவருக்குமான அரசுதான்.. இந்துக்களை பிரிக்க நினைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. முடிந்தால் ராசாவுக்கு விளக்கம் தரட்டும் பாஜக தரப்பில்" என்று ஆதரவு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+