Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்.. ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிலும் வேலையை காட்டினாரா ஈஸ்வரி? தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வேலைக்கார பெண் ஈஸ்வரி, ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசை காட்டினாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்துடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். லாக்கர் பெட்டியில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகள் எப்படி மாயமானது என்று யோசித்த ஐஸ்வர்யா எப்படி தொலைந்தது என்று தெரியாமல் தவித்து வந்தார்.

இதையடுத்து உடனே ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரகசியமாக விசாரித்து வந்தார்கள். ரஜினிகாந்த் வீட்டில் நடந்த இந்த திருட்டு தொடர்பான வழக்கை வெளியில் சொல்லாமல் ரகசியமாக போலீசார் வைத்திருந்தனர்.

சொகுசு பங்களா

சொகுசு பங்களா

அதேநேரம் வீட்டின் லாக்கரை பற்றி அறிந்த வேலைக்கார பெண் மீது சந்தேகம் அடைந்த ஐஸ்வர்யா போலீசாரிடம் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். 3பேரை பற்றியும் போலீசார் கடந்த ஒரு மாதமாக ரகசியமாக விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வரியின் வங்கி கணக்கை ஆராய்ந்த போது தான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலைக்கார பெண் ஈஸ்வரி தான் நகைகளை திருடி சொகுசு பங்களா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

2 மாடி வீடு

2 மாடி வீடு

இதையடுத்து இந்த வழக்கில் வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்கள். 60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்றது தெரியவந்தது. அதில் கிடைத்த பணத்தில் சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் போலீசார் மீட்டனர்.

திரும்ப பெற முடியாது

திரும்ப பெற முடியாது

இதனிடையே ஈஸ்வரியின் திருட்டு வேலைகள் ஐஸ்வர்யா உடன் மட்டும் நின்றுவிட்டதா அல்லது குடும்பத்தின் மற்றவர்களிடமும் திருடினாரா என்பது தெரியவில்லை. அதைபற்றியும் போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அந்த நகைகளை அவரது தந்தை ரஜினிகாந்த் ஆசையாக வாங்கி கொடுத்த பொக்கிஷம் போன்ற நகைகள் ஆகும். அவற்றை பல மாதங்களுக்கு முன்பே ஈஸ்வரி விற்றுவிட்டதால் அந்த நகைகளை அவரால் திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைக்காரி

வேலைக்காரி

வேலைக்கார பெண் ஈஸ்வரியின் செயல்கள் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி. அங்கமுத்து பெரிதாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. 2006-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி வேலைக்கு போனார். அங்கு நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாகி விட்டார். நடிகர் தனுசிடமும் அன்பை பெற்றிருக்கிறார். இதனால் வேலைக்காரி என்பதை தாண்டி நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடத்தை தெரியும் அளவுக்கு, ஈஸ்வரி நம்பிக்கைக்குரியவராக வலம் வந்துள்ளார்.

திருடி சாதித்தார்

திருடி சாதித்தார்

ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கு போன பின்னர் ஈஸ்வரி, தனது கணவருக்கு பெரிய அளவில் காய்கறி கடை வைத்து கொடுத்திருக்கிறார். தனது மூத்த மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இறுதியாக பெரிய பங்களா வாங்கி இருக்கிறார்கள். இதனால் தான் ஈஸ்வரி மீதுசந்தேக வலை பெரிய அளவில் நீண்டது. கார் டிரைவர் வெங்கடேசனுக்கு திருட்டு விவகாரம் தெரிய வரவே அவரையும் சரி கட்டியிருக்கிறார் ஈஸ்வரி. ரஜினி குடும்பத்தினரின் நம்பிக்கையை சீர்குலைத்த ஈஸ்வரி தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நகைகளை திருடி சாதித்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

தனுஷ் வீடு

தனுஷ் வீடு

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்கனவே விலை உயர்ந்த வைர மோதிரம் திருட்டு போய், பின்னர் அது மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கார பெண்ணே இவ்வளவு பெரிய திருட்டில் ஈடுபட்டு ரஜினிக்குபெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஈஸ்வரி ஐஸ்வர்யாவோடு நிற்காமல், நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் வீடுகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதனால் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஈஸ்வரியும், வெங்கடேசனும் நீதிமன்ற காவலோடு சிறையில் உள்ளனர். எனினும் விசாரணை தொடர்கிறது. ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்து தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+