Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹைஜாக்".. நிலைமை சீரியஸா போயிடுச்சே.. சக்ஸஸ் ஆவாரா எடப்பாடி பழனிசாமி.. கோட்டை விட்ட "ஓட்டை" இதுவா?

எடப்பாடி பழனிசாமி கட்சி விதிகளை மீறித்தான், பொதுக்குழுவை நடத்தினார் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு, கொஞ்சம்கூட யோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் ஒற்றை தலைமை பிரச்சனையை கிளப்பி, அனைத்துவிதமான பிளான்களையும் இவர்களே தவிடுபொடியாக்கிவிட்டனர் என்ற சலசலப்புகள் அதிமுகவுக்குள் இன்னும் அதிகமாகவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுகவில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகமும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது..

Recommended Video

    Edappadi Palaniswami இதுவரை கட்சிக்காக எதையும் செய்ததில்லை - Kovai Selvaraj*Politics

    அதிமுகவில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது..

     நியாயங்கள் + அநியாயங்கள்

    நியாயங்கள் + அநியாயங்கள்

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அன்று நடத்திய பொதுக்குழு முதல், அவரது அனைத்துவிதமான கட்சி அணுகுமுறைகள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.. சோஷியல் மீடியாவிடம் இது ஒரு விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. எடப்பாடி செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, ஓபிஎஸ் மீதான காட்டத்துடன் பேசுகிறாரே.. பெரும்பாலான ஆதரவாளர்களை தன்பக்கம் வைத்திருக்கிறார் என்பதை தவிர, வேறு என்னென்ன நியாயங்கள் அவர் பக்கம் உள்ளன என்று கேட்டோம்.. இதுகுறித்து அவர்கள் சொன்னதாவது:

     கோட்டை = ஓட்டை

    கோட்டை = ஓட்டை

    "நியாயமாக அவர் நடந்து கொண்டிருந்தால், இன்று நீதிமன்றத்துக்கு ஏன் ஓட வேண்டும்? அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், இந்த பதவி செல்லாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது, ஓபிஎஸ் தரப்பினருக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது... அப்பீலுக்காக சுப்ரீம் கோர்ட் போயுள்ள எடப்பாடி பழனிசாமி, ஹைகோர்ட் சொன்னதை, ஒரு தீர்ப்பாகவே பார்க்கவில்லை.. தனி நீதிபதியின் கருத்தாகவே பார்க்கிறேன் என்றுதானே சொல்லி வருகிறார். ஆதரவு கட்சிக்குள் இருந்தாலும், சட்டசிக்கலில் எக்கச்சக்கமாக சிக்கி உள்ளார்.

    முனுசாமி

    முனுசாமி

    பொதுக்குழு அன்று, சிவி சண்முகம்தான் இந்த பிரச்சனை இவ்வளவு வெடிக்க காரணம்.. பொதுக்குழு தீர்மானத்தை முன்வைக்காமலேயே, அந்த தீர்மானம் அங்கீகரிக்கப்படாமலேயே காலியானதாக, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஒருவரால் தடாலடியாக எப்படி சொல்ல முடியும்? சிவி சண்முகம் செய்த மிகப்பெரிய தவறுதான் இவ்வளவு தூரம் பிளவுக்கு காரணம்.. ஓபிஎஸ்ஸின் பதவி காலி என்று ஒரே ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, அதை அந்த நிமிடமே காலியும் செய்தது, கேபி முனுசாமியின் மிகப்பெரிய தவறு.. இந்த தவறுகளை எடப்பாடியே இப்போதுதான் உணர ஆரம்பித்துள்ளார். அதனால்தான் சிவி சண்முகத்தை கடிந்து கொண்டதாகவும் தெரிகிறது.

     எடுத்தேன் + கவிழ்த்தேன்

    எடுத்தேன் + கவிழ்த்தேன்

    உண்மையை சொல்லப்போனால், அன்றைக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை, இந்த சீனியர்கள்தான் கெடுத்துவிட்டார்கள்.. நியாயப்படி பார்த்தால், ஒவ்வொரு தீர்மானங்களையும் முன்வைத்து, அது தொடர்பான ஆலோசனைகளையும் முன்வைத்து, அந்த ஆலோசனைகளை ஒரு விவாதப்பொருளாக்கி, அங்கேயே ஓபிஎஸ்ஸுக்கும் அந்த தீர்மானம் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பையும் தந்திருந்தால், இது நேர்த்தியான முறையில் நடத்தப்பட்ட பொதுக்குழு என்று கூறப்பட்டிருக்கும்.. ஆனால், ஒரு மணி நேரத்துக்குள்ளேயே பொதுக்குழுவை முடித்துவிட்டார்கள் என்றால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில்தான் இந்த கூட்டம் நடந்துள்ளது என்பதற்கு இது ஒன்றே உதாரணம்..

    அத்தாட்சி

    அத்தாட்சி

    கட்சி விதிப்படி இவர்கள் எந்த விஷயத்திலும் நடக்கவில்லை.. தொண்டர்கள் விரும்பினார்கள் என்கிறீர்களே, அதற்கு என்ன அத்தாட்சி என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கேட்டாரே.. அதற்கு இன்றுவரை என்ன பதில் வைத்திருக்கிறார் எடப்பாடி.. ஒரு வாரம் முன்னாடி கூட எடப்பாடியை செய்தியாளர்கள் கேட்டார்களே, "ஒற்றை தலைமையை முன்னெடுக்கிறீர்களா?" என்று கேட்டதற்கு, "யாரோ ஏவிவிட்டு என்னை இப்படி கேட்கிறீர்கள், உங்கள் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது " என்றாரே..

     வேலுமணி + தங்கமணி

    வேலுமணி + தங்கமணி

    பிறகு 8வது நாளே, 2 மாவட்ட செயலாளர்களை விட்டு, ஒற்றை தலைமை பற்றி பேச வைப்பது எந்த வகையான அரசியல்? 8 நாளுக்குள் என்ன நடந்தது? வெறும் 8 நாளில் எப்படி 90 சதவீத ஆதரவு உங்களுக்கு மட்டுமே கிடைத்துவிட்டது.. வேலுமணி, தங்கமணி என தான் சம்பந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே பொறுப்பில் உள்ளபோது, ஓபிஎஸ் தரப்பில் அதிமுக பொறுப்பில் யார்? அதாவது பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்ததே எடப்பாடி என்றால், அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடியை தானே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பார்கள்..

     விசுவாசம் + நேர்மை + தொண்டர்கள் நலன்

    விசுவாசம் + நேர்மை + தொண்டர்கள் நலன்

    பதவி தந்ததால், ஆதரவு தருகிறார்கள்.. அவ்வளவுதான்.. இதில் விசுவாசம் + நேர்மை + தொண்டர்கள் நலன் + கட்சியின் நலன் இதெல்லாம் கிடையாது. இந்த கட்சி இன்னமும் தன் பலத்தையும் மதிப்பையும் இழக்கவில்லை என்றால், அதற்கு ஒரே காரணம் எம்ஜிஆர் வகுத்து சென்ற விதிமுறைகள் மட்டுமே.. எடப்பாடி மொத்த பேரையும் வைத்து ஹைஜாக் செய்ய பார்த்தார்.. ஆனால், எம்ஜிஆரின் அடிப்படை விதிகள் அவரது சுயநலத்தை தவிடுபொடியாக்கிவிட்டது.. இந்த அதிருப்தி தொண்டர்களிடமும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.. நீதிமன்றமும் தன் நியாயமான தீர்ப்பை வழங்கத்தான் போகிறது" என்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+