இதுக்கு கால் பண்ணுங்க! எடப்பாடி கையில் கொடுக்கப்பட்ட போன் நம்பர்.. மோடி ஆபிஸ் செய்த பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அதிமுக இடையே கூட்டணி மோதல் நிலவி வரும் நிலையில்தான் சமீபத்தில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. தேசிய அளவில் பாஜக அதிமுக நட்பாக இருந்தாலும் உள்ளூர் அளவில் அதிமுக பாஜக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலையின் சில பேச்சுக்கள் காரணமாக அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சத்தில் உள்ளது.

Did Edappadi Palanisamy get the PM Modi personal number during his delhi visit?

முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.

இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாஜக அதிமுக இடையே கூட்டணி மோதல் நிலவி வரும் நிலையில்தான் சமீபத்தில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பின் வரும் விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

அதில், அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எங்கே யாரை களமிறக்குவது, திமுகவை எப்படி எதிர்ப்பது என்று பல விஷயங்களை ஆலோசனை செய்துள்ளனர்.

இதில் அதிமுகவிடம் பாஜக 15 இடங்களை கேட்டதாக கூறப்படுகிறது. 15 இடங்களில் பாஜகவின் டாப் லீடர் களமிறக்கப்படலாம். அதனால் எங்களுக்கு கடந்த முறை போல குறைவான இடங்களை கொடுத்து ஓரம்கட்ட முடியாது என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.

அதேபோல் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்துள்ளதாம். ஆனால் இதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது .

மோடி போன் நமபர்: இந்த சந்திப்பில் வேறு ஒரு பெரிய சம்பவமும் நடந்துள்ளது. அதன்படி பிரதமர் அலுவலகம் சார்பாக ஒரு போன் நம்பர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மோடி பர்சனல் பயன்பாட்டிற்கு சில போன்களை பயன்படுத்துகிறார்.

அதில் ஒரு நம்பரைத்தான் மோடி அலுவலகம் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளதாம். மோடியுடன் எளிதாக பேசும் விதமாக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் விதமாக, எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த நம்பரை எடப்பாடிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கான மவுசு உயர்ந்து உள்ளதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லி பாஜக எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாக உள்ளது./ ஆனால் தமிழ்நாடு அளவில் அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. தேசிய அளவில் பாஜக அதிமுக நட்பாக இருந்தாலும் உள்ளூர் அளவில் அதிமுக பாஜக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+