Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பவர்" எடப்பாடிக்கு எகிறுதே.. சிதறுதா திமுக ஓட்டு.. பாஜகவுக்கு பழனிசாமி தந்த "மெசேஜ்".. ஆஹா புரியலயே

3 விதமான வியூகங்களை முன்னெடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய போகிறாராம் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலை முன்னிறுத்தி பல்வேறு காய்களை எடப்பாடி தரப்பு நகர்த்தி வந்தாலும், 2 முக்கிய விஷயங்கள் வெடித்து கிளம்பி உள்ளது... இதனால் பாஜக & திமுக இரு கட்சிகளுமே எடப்பாடி பழனிசாமி டீமின் அரசியலை உற்றுநோக்கி வருகின்றன.

கடந்த 2 வருடங்களாகவே, கூட்டணியில் இருந்தாலும், எக்காரணம் கொண்டும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் சிதறிவிடக்கூடாது என்பதில் எடப்பாடி தரப்பு படு உஷாராகவே இருந்து வந்தது..

வரும் எம்பி தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணி அமைந்தால், அதன்மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெற்றுவிடலாம் என்றும் எடப்பாடி டீம் கணக்கு போட்டபடியே இருந்தது.. மூத்த அமைச்சர்கள் சிவி சண்முகம் முதல், முனுசாமி வரை பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை உதிர்த்தாலும்கூட, பாஜக இதனை கண்டும்காணாமலும் இருந்தது..

 சீரியஸ் கண்டிஷன்

சீரியஸ் கண்டிஷன்

இந்த இடைத்தேர்தல் விவகாரம் துவங்கியபோதே, பாஜகவையும் கூட்டணியில் இருந்து கழட்டிவிட முடிவு செய்துவிட்டதாலேயே, வாசனை கழட்டிவிட்டு, நேரடியாக களமிறங்குவதாக அறிவித்ததுடன், பணிமனை பேனர் விஷயத்தையும் கையில் எடுத்தது.. இதனையும் பாஜக கவனிக்காமல் இல்லை.. இப்படியே விட்டால், நிலைமை சீரியஸாகிவிடும், எம்பி தேர்தலுக்கு சிக்கல் ஆகிவிடும் என்பதால்தான், எடப்பாடி டீமிடம் வலிய நெருங்கி வந்து ஆதரவையும் தந்தது.. இதனால் எடப்பாடி டீம் சற்று ஜெர்க் ஆனாலும், சிறுபான்மையினர் மீதான ஆதரவை மட்டும் பாஜகவால் இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது..

 பறந்த மெசேஜ்

பறந்த மெசேஜ்

அதுமட்டுமல்ல, இந்த இடைத்தேர்தல் விவகாரத்திலேயே அதை நடைமுறைப்படுத்தவும் துவங்கியது. பிரச்சாரங்களில் பெரிதாக பாஜக நிர்வாகிகளை இணைத்து கொள்வதில்லையாம்.,.. முக்கிய இடங்களில் பாஜக நிர்வாகிகளை தவிர்த்துவிட்டு, பிரச்சாரம் செய்யும்படியும் மறைமுக உத்தரவு பறந்ததாக செய்திகளும் கசிந்தன.. இதற்கு நடுவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது... அத்துடன் நேற்றைய தினம், தன்னுடைய நிலைப்பாட்டையும் பகிரங்கமாகவே வெளிப்படுத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

 மீனிங் என்ன?

மீனிங் என்ன?

"எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள்.. கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நினைக்காதீங்க. அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டோம் என்றும் அர்த்தம் கிடையாது. யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது" என்று பேசியுள்ளார். இதன்மூலம், சிறுபான்மையினருக்கு ஆதரவானர்கள் என்ற மெசேஜ்ஜை கூட்டணி பாஜகவுக்கு தெரியப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, இந்த இடைத்தேர்தலை சரியாக பயன்படுத்திக்கொண்டு, திமுகவுக்கும் சற்று ஜெர்க்கை ஏற்படுத்தி வருகிறாராம் எடப்பாடி.. பிரச்சாரத்துக்கு கூடும் கூட்டத்தினரே இதற்கு சாட்சி என்கிறார்கள்..

 ஆம்பளையா இருந்தால்

ஆம்பளையா இருந்தால்

சொந்த மண்டலம் என்றாலும், ஆளும் திமுகவுக்கு எதிராக இத்தனை பெரிய கூட்டத்தை கூட்டியதே எடப்பாடிக்கு பிளஸ்தானாம்.. அதுமட்டுமல்ல, திமுகவை எல்லைமீறி விமர்சிப்பதும் இந்த முறை அதிகமாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. வாக்காளர்களை அடைத்து வைக்கும் விவகாரத்தில், "நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வச்ச ஆம்பளையா இருந்தால், சூடு, சொரணை, வெட்கம் மானம் இருந்தால், வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.. எடப்பாடியா இப்படி பேசியது என்ற அதிர்ச்சியில் தமிழக கட்சிகள் அத்தனையும் உள்ளன.. வழக்கமாக, ஓபிஎஸ்ஸை காரசாரமாக எடப்பாடி விமர்சிப்பார் என்றாலும், திமுக விஷயத்தில் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியது கிடையாது.

 துஷ்பிரயோகம்

துஷ்பிரயோகம்

ஆனால், எடப்பாடியின் பேச்சு இந்தமுறை எல்லைகடந்து விட்டதாகவே கூறப்படுகிறது.. போலி வாக்காளர்கள் என்ற புகாரை சிவி சண்முகம் கொண்டுபோக, பணப்பட்டுவாடா புகாரை ஜெயக்குமார் கொண்டு போக, திமுக அரசு துஷ்பிரயோகம் என்று செங்கோட்டையன் கொண்டு போக, ஈரோடு தொகுதியில் திமுகவை டேமேஜ் செய்யும் போக்கு அதிகரித்தபடியே வருகிறது.. இதெல்லாம் சேர்ந்துதான் எடப்பாடிக்கு ஆதரவான களமாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், எடப்பாடி தரப்பில் 2 விதமான மைனஸ்கள் சொல்லப்படுகிறது.. இந்த முறை இடைத்தேர்தல், தென்மண்டலங்களில் நடக்கால் கொங்கு மண்டலத்தில் நடப்பது, எடப்பாடிக்கு சாதகமான விஷயம்தான்..

 ஜெர்க் திமுக

ஜெர்க் திமுக

ஆனால், ஈரோடு மேற்கில் உள்ள அளவுக்கு, ஈரோடு கிழக்கில் பெரும் ஆதரவு எடப்பாடிக்கு இல்லை என்கிறார்கள்.. 12 சதவீத வாக்குகள் மட்டுமே தன்சமூக வாக்குகள் உள்ளதுதான், எடப்பாடிக்கு சிக்கலாகவும், சவாலாகவும் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. அதேபோல, ஓபிஎஸ் ஆதரவுடன் தேர்தலை சந்தித்தித்து இருந்தால், முதலியார் சமுதாய வாக்குகளையும் சேர்த்து ஓபிஎஸ் தரப்பால் பெற்று தந்திருக்க முடியும் என்கிறார்கள்.. இப்படி சில மைன்ஸ்கள் கசிந்துவந்தாலும், திமுகவே மிரளும் அளவுக்கு வாக்கு வங்கியை பெற்றே தீர வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி..!!

சூடு சொரணை

சூடு சொரணை

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு வேறு மாதிரியாக இருந்ததாம்.. பொதுவாக, தமிழக மக்களிடம் தேர்தல் நேரத்தில் சின்னங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.. எனவே, உதயசூரியனா ? இரட்டை இலையா? என்று வரும் போது, போட்டி பலமாக இருக்கும். ஆனால், இந்த முறை தேர்தலில், "கையும் இலையும்" மோதுகின்றன.
கையா? இலையா? என வருகிறபோது, தொகுதியில் இலை தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனையெல்லாம் ஆராய்ந்துள்ள எடப்பாடி தரப்பு, "ஓட்டுகளை பர்ச்சேஸ் செய்ய நினைப்பவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினால் போதும். நாம் ஜெயித்துவிடலாம்" என்று கணக்கு போட்டுள்ளார்.. ஆனால், போகிற போக்கை பார்த்தால், திமுகவுக்கே டஃப் தரும் அளவுக்கு வாக்குகளை பெற்றுவிடலாம் என்று புது நம்பிக்கையும் பிறந்துள்ளதாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+