இரண்டரை வருட முதல்வர் பதவி! எடப்பாடியிடம் கேட்ட விஜய்? தவெக பற்றி ரகசிய சர்வே எடுத்த அதிமுக! பின்னணி
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தமாக கூட்டணி தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. த.வெ.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும், கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் விரும்புகின்றனர். அதற்கேற்பத்தான், விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அவரிடம் இவர்கள் இருவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதாவது, விஜய் தனித்து போட்டியிட வேண்டும் என திமுகவின் திட்டம். அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் சிதறவேண்டும், திமுக கூட்டணி உடைந்து விடக்கூடாது என்பதால் தான் விஜய் தனித்துப்போட்டியிட திமுக திட்டமிடுகிறது. அதனைத்தான் புஸ்ஸியும் ஜானும் செயல்படுத்துகின்றனர். ஆனால், த.வெ.க.வில் இணைந்து தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பொறுப்பைப் பெற்றுள்ள ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வை பெரிய அளவில் வெற்றிபெற திட்டமிடுகிறார்.
கூட்டணி அமைக்க திட்டம்
அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எடப்பாடி சர்வே
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பில் பேசி இருக்கிறதாம்.
இதையடுத்தே தமிழக வெற்றிக் கழகத்திற்கு உண்மையில் இவ்வளவு இடங்கள் தர வாக்கு வாங்கி இருக்கிறதா என்று தனியார் அமைப்பு ஒன்றை வைத்து எடப்பாடி சர்வே செய்துள்ளாராம்.
அதில் விஜய்க்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். முக்கியமாக வடக்கு மண்டலத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால் விஜய்க்கு வாக்காளர்கள் இல்லை. அதாவது ரசிகர்களாக இருப்பவர்கள் வாக்காளர்களாக மாற விரும்பவில்லை. விஜயின் வாக்கு சதவிகிதம் 10%க்கும் கீழ்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் ஆலோசனை:
சமீபத்தில் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர், திமுகவை வீழ்த்துவதுதான் உங்கள் லட்சியமெனில் அதிமுகவுடன் கூட்டணி வையுங்கள். தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை உங்கள் கட்சி வாங்கலாமே தவிர, வெற்றிக்கான உத்தரவாதம் கிடையாது. வெற்றியில்லாத எவ்வளவு வாக்குகள் வாங்கினாலும் அதில் பலனில்லை. ஒருவேளை, நீங்கள் தனித்து போட்டியிட்டு, திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டால் அடுத்த 5 வருடத்தில் உங்கள் கட்சியை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் திமுகவினர்' என்றெல்லாம் யோசனை தெரிவித்திருக்கிறார் பி.கே. இந்த நிலையில்தன அதிமுக - தவெக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications