'சுந்தர் சியை கல்யாணம் செய்ய மதம் மாறினேனா'.. ட்ரோல்களுக்கு குஷ்பு கொடுத்த தரமான பதிலடி
சென்னை: இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்வதற்காக நடிகை குஷ்பு இந்துவாக மதம் மாறியதாக ட்விட்டரில் சிலர் ட்ரோல் செய்திருக்கிறார்கள்.அப்படி தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு சரியான பதிலடியை நடிகையும் , தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கொடுத்தார். அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
நடிகை குஷ்பு 90களில் மிக பிரபலமான ஹீரோயினாக திகழ்ந்தவர். 1990கள் தொடங்கி 2000 வரை தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர். நடிகர் ரஜினி, கமல், சரத்குமார், சத்தியராஜ், பிரபு, கார்த்திக், முரளி, நெப்போலியன் என 90களில் புகழ்பெற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அதன்பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த குஷ்பு, சுந்தர் சியை திருமணம் செய்வதற்காக இந்துவாக மாறிவிட்டார் என்று விமர்சனங்கள் அவ்வபோது எழுந்து வருகின்றன.
அரசியலில் தீவிரமாக இறங்கி உள்ள குஷ்பு, சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். அவ்வப்போது மத ரீதியான கருத்துக்களை விமர்சனங்களை குஷ்பு எதிர்கொண்டு வருகிறார். முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த குஷ்பு, இவ்வப்போது தனக்கு எதிராக பரப்பப்படும் மோசமான கருத்துக்கள் மற்றும் ட்ரோல்களுக்கு மட்டும் பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நடிகை குஷ்பு இந்துவாக மதம் மாறியதாக சிலர் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். அவர்களுக்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
இதுபற்றி குஷ்பு கூறுகையில், "என் திருமணத்தை கேள்வி கேட்பவர்களும், அல்லது நான் என் கணவரை திருமணம் செய்து கொள்ள மதம் மாறிவிட்டேன் என்று சொல்கிறவர்களும் , தயவு செய்து கொஞ்சமாவது படித்து அறிவினை பெறுங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் இருக்கும் 'சிறப்பு திருமணச் சட்டம்' பற்றி அவர்கள் கேள்விப்படாதது வருத்தமாக இருக்கிறது. நான் மதம் மாறவும் இல்லை, என்னை மதம் மாறுமாறு யாரும் கேட்கவும் இல்லை.
எனது 23 வருட திருமணம் நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியாக இருக்கிறது. எனவே மதம் மாறியதாக சந்தேகம் உள்ளவர்கள் தயவு செய்து உங்கள் கூலியை இன்னும் அதிகமாக கேளுங்கள். உங்களுக்கு இப்போது அதுதான் தேவை" இவ்வாறு அப்பதிவில் குஷ்பு கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் "செம்மையான செருப்படி மேடம்... உன்னை வீழ்த்த முயல்பவர்களுக்கு நீங்கள் பதில் சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.... நீங்கள் அப்படிப்பட்ட ஒரு அதிசய பெண்மணி மற்றும் அனைத்து பெண்களுக்கும் ஒரு உத்வேகம். அடடா !!! " என்று பாராட்டி உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications