என்னது.. ஜெயலலிதாவுக்கு டெபாசிட் போச்சா? அண்ணாமலை சொன்ன தவறான தகவல்.. கொந்தளிக்கும் அதிமுகவினர்!
ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை சொன்ன தகவல் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
சென்னை : ஜெயலலிதாவுக்கு தேர்தலில் டெபாசிட் போனது, ஆனால் துணிந்து நின்று அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஒரே ஒரு முறை தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் டெபாசிட்டை இழக்கவில்லை, ஆனால், அண்ணாமலை தவறான தகவலைச் சொல்லி ஜெயலலிதாவை இழிவுபடுத்துகிறார் என அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இது அதிமுக - பாஜக இடையேயான கருத்து மோதலுக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக கூறினார் அண்ணாமலை. ஆனால் உண்மையில் ஜெயலலிதா தோல்வியடைந்தாரே தவிர டெபாசிட் இழக்கவில்லை.

ஜெயலலிதா பற்றி அண்ணாமலை
பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். ஜெயலலிதாவுக்கு தேர்தலில் டெபாசிட் போச்சு, துணிந்து நின்றார். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஏனென்றால் அவர் தலைவர், டெபாசிட் போனதற்காக ஜெயலலிதா பின்வாங்கவில்லை எனப் பேசியிருந்தார்.

அதிமுகவினர் கொதிப்பு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவுக்கு டெபாசிட் போனதாகக் கூறியது அதிமுகவினரை கோபப்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் டெபாசிட்டை பறிகொடுத்ததில்லை, அப்படி இருக்கும்போது, தன்னை வலிமையான தலைவர் என்று காட்டிக்கொள்வதற்காக ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக தவறான தகவல்களை பொதுவெளியில் சொல்கிறார் என அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர்.

ஒரு முறை தோல்வி
ஜெயலலிதா முதன்முறையாக 1984ல் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு மொத்தமாக 8 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். முதல்முறையாக 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் ஜெயலலிதா. 2016ல் கடைசியாக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளார். அது 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில்.

வாக்கு வித்தியாசம்
1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது அதிமுக. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வி அடைந்தார். ஆனால், அவர் டெபாசிட் இழக்கவில்லை. திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் 59,148 வாக்குகள் பெற்றிருந்தார். ஜெயலலிதா 50,782 வாக்குகள் பெற்றார். 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார் ஜெயலலிதா.

டெபாசிட் இழக்கவில்லை
அப்போதும் ஜெயலலிதா டெபாசிட்டை இழக்கவில்லை. தேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்பப் பெற வேண்டும் எனில், தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கினை பெற்றிருக்க வேண்டும். 1996 பர்கூர் தேர்தலில் மொத்தம் பதிவான செல்லத்தக்க வாக்குகள் 1,16,158. அதில் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 50,782. எனவே, ஜெயலலிதா டெபாசிட் இழக்கவில்லை. ஆனால், அண்ணாமலை பொய்யான தகவலை கூறி மறைந்த தங்கள் தலைவரை இழிவுபடுத்துவதாக அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?









Click it and Unblock the Notifications