"ஆ, அவரா".. முனுசாமி சொன்னதுமே.. சடார்னு பார்த்த எடப்பாடி.. பட்டென "பிளேட்டை" மாற்றி.. அதுதான் பாஜக
சென்னை: "அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை" என்று நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்து, மிகப்பெரிய விவாதத்தை களத்தில் உருவாக்கி வருகிறது.. பாஜக கூட்டணியை எடப்பாடி, தவிர்க்க நினைப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், ஏன் இப்படி ஒரு கருத்தை அவர் முன்வைத்தார்.. நேற்றைய தின அதிமுக கூட்டத்தில் என்னதான் நடந்தது? என்பது குறித்த ஒருசில தகவல்கள் கசிந்துள்ளன.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில், முழுக்க முழுக்க ஓபிஎஸ் எதிர்ப்பு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.. கடந்த முறை நடந்த கூட்டத்தைவிட, நேற்றைய தினம், எதிர்ப்பு அதிகமாகவே தென்பட்டது.
இத்தனை நாட்களும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஓபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது, 2ம்கட்ட தலைவர்களும் ஓபிஎஸ் பெயரை சொல்லியும், சொல்லாமலும் விமர்சனங்களை முன்வைத்தனர்..

போலி போலி
இதில், முக்கியமானவர்கள் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும்தான் என்கிறார்கள்.. பொருட்களில் போலி இருப்பது அரசியலில் போலி ஓபிஎஸ், அவரை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று சொல்லவும், மற்ற நிர்வாகிகளும் இதை ஆமோதித்தே பேசினார்களாம். இப்படி ஓபிஎஸ் விஷயத்தில் நேரடியாக தங்கள் நிலைப்பாட்டை உறுதிசெய்த எடப்பாடி தரப்பில், சிவி சண்முகத்துக்கும் லேசாக குட்டு விழுந்துள்ளது..

2 டீம்கள்
அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்றும், இனியும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் சிவி சண்முகம் சொல்லி வருவது, அதிமுகவின் சீனியர்களுக்குள்ளேயே புகைச்சலை கிளப்பி விட்டு வருகிறது.. ஜெயக்குமார், முனுசாமி, சிவி சண்முகம், என்று பலரும் பாஜகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், வேலுமணி, தங்கமணி போன்ற சீனியர்கள் பாஜகவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள்.. தன்னுடைய தரப்பிலேயே 2 விதமான டீம்கள் பிரிந்துள்ள நிலையில், பாஜக குறித்து, எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுப்பார்? என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நேற்றைய தினம் எகிறியது.

வேணவே வேணாம்
அதுமட்டுமல்ல, பாஜக எதிர்ப்பு என்ற தன்னுடைய கருத்தை, சிவி சண்முகம், ஜெயக்குமார் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி பிரதிபலித்து வருகிறார் என்ற பேச்சும் அரசியல் களத்தில் உள்ளது.. எனவே, இதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வாரா? என்ற ஆர்வமும் நேற்று எழுந்தது.. அதன்படியே, சிவி சண்முகம், பாஜக எதிர்ப்பு பேச்சை நேற்றும் பேசியுள்ளார்.. "பாஜக நம்முடைய கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் ஓட்டு கொஞ்சம் கூட கிடைக்காது... தயவு செய்து பாஜகவுடன் கூட்டணி வேண்டாம். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரிடம் இருக்கும் நம்முடைய முன்னாள் நிர்வாகிகளை திரும்ப அழைக்க வேண்டும் என்று சொன்னதுமே, சலசலப்பு துவங்கி விட்டதாம்.

முனுசாமி பேசாதீங்க
இதற்கு பிறகு, ஒவ்வொருவராக ஓபிஎஸ்ஸை தாக்கி பேசும்போது, மூத்த தலைவர் கேபி முனுசாமி மட்டும் ஒரு விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்தாராம்.. "மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும், உங்கள் கருத்துக்களை தலைமைக்கழக கூட்டங்களில் மட்டும் பேசுங்கள்.. அதைவிட்டுவிட்டு, பொது இடங்களில் நின்றுகொண்டு, அவருடன் கூட்டணி கிடையாது, இவருடன் கூட்டணி கிடையாது என்றெல்லாம் பேசாதீங்க.. இதெல்லாம் தலைமை பேச வேண்டியது.. நீங்கள் பேசாதீங்க.. அப்படி பேசிவிட்டு, அதனை தொண்டர்கள் கருத்தும் என்றும் சொல்லாதீங்க.. உங்கள் கருத்து எதுவோ அதை சொல்லுங்க" என்று சிவி சண்முகம் பெயரை குறிப்பிடாமல் சொன்னாராம்.

பிளேட்டை திருப்பி
முனுசாமி இப்படி குறிப்பிட்டது யாரை என்று தெரிந்தாலும், அதை வேறு யாரும் பெரிதுபடுத்தவில்லை. பிறகு, எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "மத்திய அரசு, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களிலோ, இந்த வழக்கிலோ எந்த தலையீடும் செய்யவில்லை.. அதனால் கட்சி விஷயங்களில் கவனம் செலுத்துங்கள், திமுகவை அரசின் வேதனையை பேசுங்கள்" என்று சொல்லி, திமுக பக்கம் விவகாரத்தை திருப்பி, அலர்ட் செய்திருக்கிறார் எடப்பாடி.. பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கே தயக்கம் இருப்பதாக சொல்லி வரும் நிலையில், நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, ஒருசாராருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.

பல்டி
பாஜக அதிமுக விஷயத்தில் தலையிட்டு வருவதை தமிழகம் அறியும் என்றாலும், "பிரதமர் சொல்லித்தான் கட்சி பதவியை ஏற்றுக் கொண்டதாக" ஓபிஎஸ்ஸே பலமுறை ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ள நிலையில், அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை என்று எடப்பாடி சொல்ல காரணம் என்ன? என்ற விவாதமும் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளது.. ஒருவேளை, நாலாபக்கமும் நெருக்கடிகள் சூழ்ந்து வரும் நிலையில், பாஜகவை ஒரேடியாக பகைத்து கொள்ள முடியாது என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறதா? அல்லது பட்டும் படாமல் ஒதுங்கி நின்று அரசியல் செய்ய நினைக்கிறதா? என்ற காரசார கருத்துக்களும் இணையத்தில் உலா வர தொடங்கி உள்ளன..!!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications