"வாய்ப்பூட்டு".. அப்பவே கி.வீரமணி முகமே மாறிடுச்சு.. ஸ்டாலினிடம் போன "விஷயம்".. குலுங்கிய அறிவாலயம்
சென்னை: விரைவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சில முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளாராம்.. இதுகுறித்த தகவல்கள் கசிந்து வருகிறது. என்னவாம்?
10 வருடம் கழித்து ஆட்சிப்பொறுப்பை திமுக ஏற்றதிலிருந்தே சில சீனியர் அமைச்சர்கள் சர்ச்சை பேச்சுக்களில் தொடர்ந்து சிக்கினார்கள்.. இதில் தொடர்ந்து அடிபட்டு வந்தது ஆர்எஸ் பாரதியின் பெயர்தான்.

மீடியாக்களை "சிவப்பு விளக்கு" பகுதியுடன் தொடர்புபடுத்தி பேசிய கொந்தளிப்பு அடங்காத நிலையில், இன்னொரு சர்ச்சையில் சிக்கினார். திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, "தேர்தல் அறிக்கையை டிஆர் பாலுதான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம் போய் கேளுங்கள்.. அதை விட்டுவிட்டு, சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
அமைச்சர்கள்: இதுபோலவே, டிகேஎஸ் இளங்கோவன், பொன்முடி, கேஎன் நேரு, காமராஜர் போன்ற அமைச்சர்கள் வரிசையாக சர்ச்சையில் மாட்டினார்கள். இதெல்லாம் முதல்வரின் காதுகளுக்கு அவ்வப்போது கொண்டு செல்லப்பட்ட நிலையில், சில அமைச்சர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய முதல்வர், அவர்களை கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில்கூட அமைச்சர் துரைமுருகனின், மணியம்மை குறித்த பேச்சானது, திராவிடர் கழகத்தையே கொந்தளிக்க வைத்துவிட்டது.. இதனால், மூத்த தலைவர் கி.வீரமணி கடும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்..
துரைமுருகன்: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட வீரமணி, "துரைமுருகனிடமிருந்து இப்படிப்பட்ட பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. வயதாக ஆக கண்ணியமும், பேச்சில் தெளிவும் இருக்க வேண்டும். அண்ணாவை பற்றி அண்ணாமலை சிறுமைப்படுத்தியதற்கும், பெரியாரை பற்றி துரைமுருகன் பேசிய பேச்சுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. துரைமுருகனை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள்" என்று ஆதங்கத்துடன் சொன்னாராம்.
இதற்கு பிறகுதான், முதல்வர் துரைமுருகனுக்கு போனை போட்டு பேச, வீரமணியும் இதுகுறித்து துரைமுருகனிடமே பேச, இறுதியில், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் மூத்த தலைவர் துரைமுருகன்.
அமித்ஷா: அமைச்சர்களின் சர்ச்சைகளிலேயே தேசிய அளவுக்கு பேசப்பட்டது, உதயநிதி சனாதனம் குறித்த பேச்சுதான்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல், அரவிந்த் கெஜ்ரிவால் வரை கண்டனங்கள் எழுந்துவிட்டன.. பாஜக இதை மிகப்பெரிய விவகாரமாக்கியது.. போலீஸ்வரை உதயநிதி மீது புகாரும் சென்றது.. சுப்ரீம் கோர்ட்டுக்கும் புகாரை எடுத்து கொண்டு போனார்கள். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
எனவேதான், முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது சில வாய்மொழி உத்தரவுகளை அமைச்சர்களுக்கு பிறப்பித்தாராம் ஸ்டாலின்.
"உதயநிதி பேச்சை, இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்பதுபோல பாஜக நாடெங்கும் பரப்பியது.. சேகர்பாபுவை கண்டித்து போராட்டமும் நடத்தியது.. தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ளது.. அதனால், அமைச்சர்கள் தங்கள் துறை தொடர்பான ஆலோசனை கூட்டங்களின்போதும், மீடியாக்களை சந்திக்கும் போதும், பொது நிகழ்ச்சிகளில் பேசும்போதும் கவனமுடன் பேச வேண்டும்.
அறிவுறுத்தல்கள்: துறையின் செயல்பாடு தொடர்பாக மட்டுமே பேச வேண்டும். வேறு எதுவும் பேச கூடாது. எத்தனையோ முறை சொல்லியும்கூட, சிலரின் செயல்பாடு இன்னமும் அப்படியே உள்ளது, இனிமேல் இதையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.. எந்த நிகழ்வுகளில் பங்கேற்றாலும், பங்கேற்பதற்கு முன்பு, அந்த நிகழ்வின் அவசியம், ஏற்பாட்டாளரின் பின்னணியெல்லாம் தெரிந்த பின்பே பங்கேற்க வேண்டும்" என்றெல்லாம் முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications