Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தொடமுடியாது".. மேலிடம் போன புகார்கள்.. யோசித்த நிர்மலா.. "தாமரையில்" மலர்ந்த குஷ்பு.. வாவ் பின்னணி

பாஜக குஷ்புக்கு புதிய போஸ்டிங் எப்படி கிடைத்தது என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட காலமாகவே மிகப்பெரிய பதவியை எதிர்நோக்கியிருந்த நிலையில், பாஜக குஷ்புவுக்கு அது அவரது கையில் வந்து சேர்ந்துள்ளது.. இதனால் பூரித்து காணப்படும் குஷ்புக்கு, நாலாபக்கமும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

2020ம் ஆண்டில், மேலிட பாஜக சில முக்கிய திருத்தங்களை செய்து, அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தது.. அதன்படி, தேசிய நிர்வாகிகளை நியமித்து ஒரு லிஸ்ட்டும் வெளியிட்டிருந்தது..

ஆனால், அந்த லிஸ்ட்டில் தமிழகத்தை சேர்ந்த யார் பெயரும் இடம் பெறவில்லை.. குறிப்பாக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா என்று யாருடைய பெயர்களும் அதில் இடம்பெறவில்லை..

வானதி சபாஷ்

வானதி சபாஷ்

எனினும், எப்படியாவது பொறுப்புகள் அல்லது பதவிகள் கிடைக்கும் என்று அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்தவர்களில் வானதி சீனிவாசனும் ஒருவர்.. அந்தவகையில், கடந்த 2020, அக்டோபர் மாதம், வானதி சீனிவாசனுக்கு தேசிய பொறுப்பு தரப்பட்டது.. தமிழிசை சவுந்தராஜன் ஆளுநராக சென்றபோதே, இவர்தான் அடுத்த மாநில தலைவர் என்று சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை பாஜகவினர் சொல்ல ஆரம்பித்துவிட்ட நிலையில், அளவுக்கு அதிகமாக அந்த பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார் வானதி என்றார்கள்.. தேர்தல் அப்போது நெருங்கும் சமயம் என்பதாலும், திமுகவை சமாளிக்கவும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஓட்டுக்களை அள்ளவும் எல். முருகனை தலைவராக நியமித்துவிட்டனர்..

குஷ்பு + பாஜக

குஷ்பு + பாஜக

அந்த சமயத்தில்தான் குஷ்புவும் பாஜகவுக்குள் என்ட்ரி தந்தார்.. குஷ்பு கட்சியில் சேர்ந்த உடனேயே, வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி தலைமை பதவியும் வந்து சேர்ந்தது.. தமிழகம் அறிந்த மிகப் பிரபலமாக இருக்கும் பெண் அரசியல்வாதியாக குஷ்பு அறியப்பட்ட நிலையில், மாநில அளவிலான முக்கிய பதவியை பாஜக ஒதுக்கக்கூடும் என்றும், அதனால்தான், வானதிக்கு தேசிய அளவில் பதவியை தந்து, குஷ்புவுக்கு ரூட் கிளியர் செய்துவிட்டுள்ளதாகவும், அப்போதே முணுமுணுப்புகள் கிளம்பின.. ஆனால் தேர்தலில் சீட் தரப்பட்டதுடன், பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கும் குஷ்புவுக்கு அதைவிட பெரிய பதவி எதுவும் கிடைக்காமலேயே இருந்தது.

பின்னணி காரணம்

பின்னணி காரணம்

இப்போதுதான், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக அண்மையில் நியமித்துள்ளது மத்திய பாஜக அரசு... இந்த நியமனத்துக்கான பின்னணி காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.. இந்த ஆணையத்தின் சேர்மனாக இருப்பவர் ரேஹாஷர்மா.. இவர் சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்துக்கு சில தகவல்களை தெரிவித்திருந்தாராம்.. குறிப்பாக, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நிறைய புகார்கள் வருவதையும், அதிலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் புகார்கள் அதிர்ச்சியாக இருப்பதாகவும், அதனை விசாரிப்பதற்காக உறுப்பினர் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்திருந்திருக்கிறார்.

நிர்மலா ப்ளான்

நிர்மலா ப்ளான்

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் ஆலோசனையின் படி, இந்த பிரச்சனையை கவனிக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. நிர்மலாவும் யாரை உறுப்பினராக சிபாரிசு செய்வது என விசாரித்திருக்கிறார். குறிப்பாக பாஜகவின் தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷிடம் விவாதித்துள்ளார் நிர்மலா.. சந்தோஷுக்கும் குஷ்புக்கும் ஏற்கனவே நெருங்கிய நட்பு உண்டு. இதனையடுத்து சந்தோஷ்தான் குஷ்புவை சொல்லியிருக்கிறார்... அதனடிப்படையிலேயே, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார் என்கிறது டெல்லி தகவல்..!!

துணிச்சல் ட்வீட்

துணிச்சல் ட்வீட்

பெண்களின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் குஷ்பு.. அவர் காங்கிரசில் இருந்தபோதும்சரி, பாஜகவில் இருக்கும்போதும்சரி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் எங்கு நடந்தாலும், அதை தட்டிக் கேட்டும் வருபவர்.. யாருக்காகவும் குஷ்பு பயந்தது இல்லை.. அவரது துணிச்சலான பல ட்வீட்கள் இதற்கு கடந்த காலங்களில் உதாரணமாக இருந்திருக்கின்றன.. கடந்த வாரம்கூட குஷ்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார்..

கனத்த நம்பிக்கை

கனத்த நம்பிக்கை

"பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இதுபோன்ற நிகழ்வுகளில் முதல்வர் ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது" என்று பதிவிட்டிருந்தார்.. அந்த வகையில் பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நிலையில்தான், இப்படிப்பட்ட பதவி அவருக்கு வலிய வந்து கிடைத்துள்ளது.. இதையடுத்து, பெண்கள் மீதான குற்றங்கள் குறைய குஷ்பு நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் நலனில் கூடுதல் கவனங்களை அவர் இனி செலுத்தக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்...!!

மோடிக்கு நன்றி

மோடிக்கு நன்றி

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது... பதவியேற்றதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது தலைவர் மோடியின் ஆசியோடு இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.. மேலும், இந்தப்பதவிக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், வரும் காலத்தில் தன்னுடைய நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் குஷ்பு பேசியிருக்கிறார். அதில் "முதலில் இந்தப்பதவியை எனக்கு அளித்த மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், NCW -வில் உள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹாட் லிஸ்ட்

ஹாட் லிஸ்ட்

பெண்களுக்காக நான் குரல் கொடுப்பதை பார்த்து, என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறார்கள். அதிகபட்சமாக என்னுடைய பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமே இருக்கும். தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நாம் தினமும் நாளிதழ்களில் பார்க்கிறோம். எங்கேயாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படும் போது, அவர்கள் தைரியமாக முன் வந்து பேச மறுக்கிறார்கள். நான் தமிழ்நாட்டில் வாழும் பெண்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் ஒன்றுதான். உங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி தைரியமாக முன் வந்து பேசுங்கள் என்றும் குஷ்பு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+