ஓபிஎஸ் சீட்டுக்கு வந்த சிக்கல்.. எடப்பாடி டீம் பரபர கணக்கு..‘ட்விஸ்ட்’ கொடுத்த சபாநாயகர் அப்பாவு!
உச்ச நீதிமன்றம், ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளதால், சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : அதிமுக வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இது ஈபிஎஸ் தரப்பின் கையை ஓங்கச் செய்துள்ளது. இந்தத் தீர்ப்பையடுத்து, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவுள்ளார் ஈபிஎஸ். இதனால், சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் நீக்கம்
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்றாகிறது. ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் நீக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என்ற நிலை வந்துள்ளது. இந்த தீர்ப்பால், இனி ஈபிஎஸ் தரப்பு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவும் தடையில்லை.

எம்.எல்.ஏ பதவி?
தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் எம்.எல்.ஏ பதவிகளை நீக்கவும் ஈபிஎஸ் முயலக்கூடும். அவர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நிலையில், தற்போது கட்சியிலேயே இல்லை என்பதால் கொறடா மூலம் சபாநாயகருக்கு மனு அளிக்கலாம். ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அறிவுறுத்தலாம்.

ஓபிஎஸ் இருக்கை
ஏற்கனவே, சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும், அந்த இடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் அருகிலேயே அமர்ந்திருந்தார். தற்போது உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனித்துவமான அதிகாரம்
இந்நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவுவிடம் இதுதொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவையை நடத்துவது பேரவைத் தலைவரின் முழு பொறுப்பு. மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications