"ஓபிஎஸ்ஸை" தேடிய அந்த கண்கள்.. "அவங்களும்" வர்றாங்க.. எடப்பாடி கூடாரம் கலையுதா: குண்டு வீசிய புள்ளி
சீனியர் தலைவர்கள் விரைவில் ஓபிஎஸ் பக்கம் வர போவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள சீனியர்கள் அமைச்சர்கள் விரைவில் ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக மூத்த தலைவர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.. அத்துடன் இதற்கான காரணங்களையும் அவர் கூறியுள்ளார்.. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வரும் நிலையில், மருது அழகுராஜ் பேசிய வார்த்தைகள், அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டத்தை இன்று தலைமை கழகத்தில் நடத்தி வருகிறார்.
அதிமுகவின் கோர்ட்டின் தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கிறார்கள்..

சாயும் கூடாரம்
அதேபோல, பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க உள்ளார்கள். அதேபோல, தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி கூடும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது குறித்தும், இது தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது... இந்த கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு டிவி சேனலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், அதிமுகவின் சீனியர்கள் விரைவில், ஓபிஎஸ் பக்கம் வரப்போவதாக சொல்லி உள்ளார்.

கழிக்கப்படுவார்
அவர் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி எதேச்சாதிகாரத்தையும், சர்வாதிகாரத்தையும் கொண்டு செல்கிறார்.. இதை தொண்டர்கள் நேசிக்கவில்லை.. எல்லாரும் புலம்ப தொடங்கிவிட்டார்கள்.. ஓபிஎஸ்ஸை தேடி வருவதற்கு ஒவ்வொரு மூத்த அமைச்சர்களும் காரணங்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.. விரைவில் எடப்பாடி கழிக்கப்படுவார்.. எடப்பாடி தவிர்க்கப்படுவார்.. ஒற்றுமைக்கு அவர் ஒத்துவராவிட்டால், எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும்.. நேற்றுகூட, முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் புதுக்கோட்டை சுப்பிரமணியன், எங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வந்திருந்தார்.. நாங்கள் யாரையுமே வலிய கூப்பிடவில்லை..

செல்லூர் ராஜூ
ஆசைகளை சொல்லி, பணத்தை கொடுத்து யாரையும் கூப்பிடவில்லை.. மாவட்ட செயலாளர்கள் மட்டும் வாருங்கள் என்று அழைத்தோம்.. அந்த சாலையே நிரம்பிவிட்டது.. அரங்கமே நிரம்பி வழிந்தது.. எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு அப்படி இல்லை.. 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்தால்தான் ஆள் வருவாங்க.. எடப்பாடியிடம் உள்ளவர்களில், மனசாட்சியுள்ளவர்களிடம் மாற்றம் வர ஆரம்பித்துவிட்டது... ஓபிஎஸ் பக்கம் வருவதற்கான காரணங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.. செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார் போன்றோர்கள் எல்லாம் தென்மாவட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்ல..

விசித்திரம் விசித்திரம்
இவர்கள் எல்லாம் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதற்காக தென்மாவட்ட மக்களின் மனசாட்சிகளும் கிடையாது.. அதிமுகவில் அத்தனை பிரச்சனைக்கும் ஆணிவேர், ஆர்பி உதயகுமார்தான்.. அடிக்கிற காற்று எந்த பக்கம் என்பதை பார்த்து, முதலில் போய் காலில் விழக்கூடிய விசித்திரமான அரசியல்வாதி அவர்.. அதனால், ஓபிஎஸ்ஸை தென்மாவட்டம், வடமாவட்டம் என்றெல்லாம் பிரித்து பார்க்க முடியாது.. அவர் அம்மா காட்டிய அடையாளம்.. அவர் பிறந்த மண் என்பதால் கூடுதல் ஆதரவு கிடைக்கிறது..

குடித்த நாக்கு
பாஜகவை எதிர்க்க ஒரு துணிச்சல் வேண்டும்.. அந்த துணிச்சல் எடப்பாடியிடம் இல்லை.. வெளியே தைரியசாலி போல காட்டிக்கொள்வார்.. ஆனால் எடப்பாடி போல ஒரு கோழையை நீங்கள் பார்க்க முடியாது.. ஒரு சட்ட அமைச்சராக இருந்த சிவி சண்முகம், பேசுகிற வார்த்தைகள் எல்லாம் சரியா? "குடித்த நாக்கு, தடித்த வார்த்தைகளை பேசும்" என்பார்கள்.. தரம்தாழ்த்தி பேசுவதால்தான், சிவி சண்முகம் போன்றோரை மனித கணக்கில் இருந்தே கழித்துவிட்டார் ஓபிஎஸ் என்றே நினைக்கிறேன்..

தேடிய கண்கள்
குஜராத் பதவியேற்பு விழாவுக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அழைக்கப்பட்டிருந்தார்.. எங்கே ஓபிஎஸ், எங்கே ஓபிஎஸ் என்று தேடி கூப்பிட்டு அருகில் அழைத்து நலம் விசாரித்தார் பிரதமர்.. அமித்ஷாவும் நட்டாவும், ஓபிஎஸ் அருகில் நின்று பேசியதும், உற்சாகத்தோடு ஓபிஎஸ்ஸை அவர்கள் வழியனுப்பி வைத்ததையும் பார்த்து, எடப்பாடியால் பொறுக்க முடியவில்லை. அதற்காகவே பாஜகவை திட்டணும்.. ஆனால், தன்னால் நேரடியாக பாஜகவை திட்ட முடியாது.. இந்த பக்கம் எப்படி ஜெயக்குமாரோ, அந்த பக்கம் சிவி சண்முகம்.. இவர்களை வைத்துக் கொண்டு திட்டி வருகிறார்.. ஆனால், ஓபிஎஸ் பக்கம், விரைவில் ஆதரவாளர்கள், சீனியர்கள், வந்து சேரத்தான் போகிறார்கள்" என்றார்.

முகம் சுளிப்பு
தொடர்ந்து அவர் பேசும்போது, "சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்ததே, அப்போது கையெழுத்து போட்டு இரட்டை இலை சின்னத்துடன் தர எடப்பாடியால் முடிந்ததா? உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைதான் பார்க்க வேண்டும்.. தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.. வரும் 2026வரைதான் ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர்.. அவர் கையெழுத்து போட்டால்தான் சின்னம் கிடைக்கும்.. அந்த சின்னத்துக்கு உரியவர் ஓபிஎஸ் மட்டுமே.. தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்தான் நிற்கிறார்கள் என்பது எடப்பாடிக்கும் தெரியும்.. கட்சி அவரிடம்தான் உள்ளது என்பதும் எடப்பாடிக்கு தெரியும்.. வரும் 2026வரை அவர்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதும் எடப்பாடிக்கு தெரியும்.. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை செய்ய போவதே ஓபிஎஸ்தான்.. முகம் சுளித்து கொண்டு, எடப்பாடியின் செயல்பாடுகளை தொண்டர்கள் பார்க்க துவங்கிவிட்டார்கள்.. என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications