தேங்காய் சிதறுது.. குஷியில் திமுக.. குறுக்கே வந்த அண்ணாமலை, ஒருபடி மேலே போயிட்டாங்க ராஜேஸ்வரி பிரியா
சென்னை: 3 ஆண்டு கால சாதனைகளை திமுக அரசு மார்தட்டி சொல்லி கொண்டிருந்தால், எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சிக்க துவங்கி உள்ளன. அத்துடன் சில குற்றச்சாட்டுகளையும் அரசு மீது முன்வைத்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவு பெற்று, 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.. இதுகுறித்து திமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் 3 ஆண்டு கால சாதனைகளை இன்று பட்டியலிட்டு சொல்லியுள்ளது.

திமுக சாதனை: ஆனால், எதிர்க்கட்சிகளோ, திமுகவை வழக்கம்போல் விமர்சித்து கொண்டிருக்கின்றன.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "கடந்த 33 மாதங்களில் திமுக அரசு செய்த சாதனை என்ன? ஆனால், பிரதமர் மோடி 10 லட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார்" என்று பாஜகவின் சாதனைகளை சொல்லி வருகிறார்.
2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், "திமுக செய்த ஒரே ஒரு சாதனையை சொல்லுங்க பார்ப்போம்.. பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று மக்கள் போராடுகிறார்கள்.. ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.. மாணவர்கள் போராடுகிறார்கள்.. இப்படி எல்லாரும் தெருவில் நின்றுபோராடி கொண்டிருந்தால், "ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி" என்று சொல்கிறார்களே.. இவர்களை பார்த்து, "இருக்கிறதா மனசாட்சி" என்றுதான் கேட்க தோன்றுகிறது" என்றார்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, "திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. தமிழகம் பூராவும் போதைப்பொருள் நிறைந்த இடமாக காட்சி அளிக்கிறது. திமுக நிர்வாகிகூட இதில் சமீபத்தில் சிக்கினார். ஸ்டாலின் என்றைக்கு ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தாரோ அன்றைக்கே காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. திமுக ஆட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த திட்டத்தையும் காணவில்லை" என்கிறார்.
இந்த வரிசையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் இணைந்துள்ளார்.. திமுக அரசை தொடர்ந்து, கடுமையாக விமர்சித்து வருபவர்களில் ராஜேஸ்வரி பிரியாவும் ஒருவர்..
துணிச்சல்: யாருக்காகவும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர்.. அதேசமயம், மனதில் பட்ட கருத்தை, துணிச்சலுடன் ஓங்கி சொல்லி வருபவர்.. இதோ திமுகவின் 3 ஆண்டு சாதனை குறித்து, ராஜேஸ்வரி பிரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் சாதிய பிரச்சினைகள்,லாக்கப் மரணங்கள், சட்ட ஒழுங்கு சீரழிவு, தமிழகம் முழுவதும் விதவிதமான போதைப் பொருள் விற்பனை, மது போதையினால் பல்வேறு குடும்ப மற்றும் சமூக அவலங்கள், கனிம வளங்கள் கொள்ளை, எல்லாத் துறைகளிலும் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவு உயர்வு, மின்கட்டண உயர்வு இவற்றினால் மக்கள் அன்றாடம் அல்லல் மிக்க வாழ்வை நடத்திகொண்டு உள்ளார்கள்..
திமுக: 3 வருட கால ஆட்சி கொலைகள் அதிகமானதே சாட்சி!" என்று பதிவு செய்துள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி. இப்படி திமுகவின் இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்த, குற்றச்சாட்டுகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் லிஸ்ட் போட்டுள்ளது, திமுக தரப்புக்கு எரிச்சலை தந்து கொண்டிருக்கிறதாம்..!!!












Click it and Unblock the Notifications