Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. போலீசுக்கே தண்ணி காட்டும் ‘சம்பவம் செந்தில்’.. இத்தாலிக்கு எஸ்கேப் ஆனாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடியான சம்பவம் செந்தில் என்கிற சம்போ செந்தில் இத்தாலிக்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வழியாக தாய்லாந்து சென்று அங்கிருந்து அவர் இத்தாலிக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Armstrong sambo senthil Police


இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், அதிமுக நிர்வாகியான மலர்கொடி, தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக நிர்வாகியான அஞ்சலை, அதிமுக கவுன்சிலரான ஹரிதரன், வழக்கறிஞர் மாத்தூர் சிவா உள்ளிட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாமாக பிரமுகர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாம்போ செந்தில் என்ற பிரபல ரவுடிக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கொலைக்கு பண உதவி செய்தது சாம்போ செந்தில் தான் என்பதும், ஹரிஹரன் மூலமாக அந்த பணம் ஏற்கனவே கைதான அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை பிரித்து சிலருக்கும் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் தேடி வரும் சாம்போ செந்தில், சென்னையில் ஏற்கனவே பல சம்பவங்களை செய்திருக்கிறார்.

குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திர குமார் கொலை, முத்தியால்பேட்டையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது இருக்கிறது. இந்த நிலையில் அவரை காவல்துறையினர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வலைவீசி தேடி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டி கொடுப்பதுதான் சாம்போ செந்திலின் வேலை என கூறப்படுகிறது. பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் தொடர்பான போட்டியில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது செந்தில் தலைமைகளாக இருக்கும் நிலையில் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வட மாநிலங்களில் இருந்து கொண்டு கொலை திட்டங்களை சம்போ செந்தில் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்களை மிரட்டி வருவதாகவும், அந்த பணத்தை தனது கூட்டாளிகள் மூலமாக பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

நெய்டாவில் சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக கிடத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் இதுவரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. இந்த நிலையில் சம்போ செந்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இத்தாலி அல்லது ஐரோப்பிய நாடுகளில் அவர் மறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னை தேடுவதை அறிந்த சம்போ செந்தில் தமிழகம் வந்து குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து இலங்கை சென்றதாகவும், அங்கிருந்து தாய்லாந்து சென்று பிறகு இத்தாலி சென்றிருக்கலாம் என தகவல்கள் உலாவுகிறது.

இதை அடுத்து அவரை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்துள்ளனர். ஏற்கனவே விமான நிலையங்களில் சம்போசெந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கள்ளத்தோணி மூலமோ அல்லது சட்டவிரோதமாகவோ சம்போ செந்தில் தப்பி சென்றிருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். மேலும் சம்போ செந்தில் தப்பி செல்ல உதவியது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+