ஐயா ஸ்டாலினுக்கு தூக்கம் வரலயாமே.. என்னாலயும் முடியல.. இதுதான் "ப்ளான்".. ஓபனாகவே போட்டுடைத்த சீமான்
நாங்குநேரியில் சீமான் பேசியபோது, முதல்வர் ஸ்டாலினின் பேச்சை சுட்டிக்காட்டினார்
சென்னை: நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு, இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு, மிகப்பெரிய விவாதத்தையும் சலசலப்பையும் கிளப்பிவிட்டது.
"திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் மத்தளத்துக்கு 2 பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ - மூத்தவர்களோ - அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

பழிக்கு பழி
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள். உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் - உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது" என்று நொந்துபோய் பேசியிருந்தார்.

தூக்கம் போச்சே
முதல்வரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவிலும் விவாதத்தை கிளப்பியது.. ஒரு மாநில முதல்வரே இப்படி சொல்லலாமா? அவர் மனம் நொந்து கொள்ளும்படி சொந்த கட்சியினர் நடந்து கொள்ளலாமா என்ற வருத்தத்தை ஏற்படுத்தியது.. மற்றொருபக்கம், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கின.. "எங்க அம்மா இருந்தப்போ, ஆட்சியில் இருந்த அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும்தான் போச்சு.. அந்த அளவுக்கு பயந்து நடுங்கி வேலை பார்த்தனர்.. ஆனால், முதல்வருக்கே தூக்கம் இல்லாமல் போவதை திமுகவில்தான், தனது கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகிகளை வைத்துக்கொள்ள இயலவில்லை" என்று விமர்சித்திருந்தனர்.

சான்ஸ் + சாய்ஸ்
இந்த விமர்சனம் இன்றுவரை நிற்கவில்லை.. இதோ சீமானும் ஆரம்பித்துவிட்டார்.. சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் திமுகவையும், சான்ஸே கிடைக்காவிட்டாலும், பாஜகவையும் மேடைக்கு மேடை போட்டு தாக்கி கொண்டிருக்கிறார் சீமான்.. நேற்றுகூட, நெல்லை மாவட்டம், நாங்குநேரி நாம் தமிழர் கூட்டம் ஒன்றில் சீமான் பேசியதை கேட்கும்போது, ஸ்டாலின் பேசியதை மேடையில் குறிப்பிட்டுள்ளார். சீமான் பேசும்போது, "ஐயா ஸ்டாலின், ஆட்சிக்கு வந்துட்டு தூக்கம் வரலேன்னு சொல்றாரு.. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது.. அவராச்சும் சொல்லிட்டாரு.. என்னால சொல்ல முடியல..

இரும்பு கதவு
ஒற்றுமையா இணைந்து வேலை பார்க்கணும்.. மனக்கசப்பு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. பிணக்கமாகவும், இணக்கமாகவும் இணைந்து பணியாற்ற வேண்டும்.. நாம பணியாற்றுவதை பார்த்து, பிற பிள்ளைகள் ஓடிவந்து நம்ம கட்சியில் சேர ஆர்வம் காட்டணும்.. அனைவரயும் நேசித்து வழிநடத்த வேண்டும்.. "ஒரு இனிய சொல் இரும்பு கதவையும் திறக்கும்".. நீங்க வாயில் இருந்து எந்த வார்த்தையையும் பேசாதீங்க, இதயத்தில் இருந்து ஒவ்வொரு சொல்லையும் எடுத்து பேசுங்கள் என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.. வாயிலிருந்து நாம் பேசும் வார்த்தை, காதுக்குள் வரைக்குள்தான் போகும்.. ஆனால், இதயத்தில் இருந்து பேசும் வார்த்தைகள் காதுக்குள் நுழைந்து, மூளைக்கு சென்று செயல்பட துவங்கும் என்கிறார்..

களப்போர்
என் உறவுகளும் அப்படி பேசி பழக வேண்டும்.. முதன்முதலில் கட்சி ஆரம்பிக்கும்போது, ஒவ்வொரு ஊராக சென்றேன்.. ஒவ்வொரு ஊரையும் பேசி பேசியே சரிசெய்து வந்தேன்.. அதுமாதிரி இப்பவும் போக வேண்டி இருக்கு.. 2024 தேர்தலுக்குள் போக வேண்டியிருக்கு.. அதற்குள் நாம் தயாராகிவிட வேண்டும்.. மற்றவர்களுக்கெல்லாம்தான் தேர்தல் என்பது கட்சி சம்பந்தப்பட்டது.. நமக்கு அப்படியில்லை, அது ஒரு போர்.. அநீதி, அக்கிரமம், ஊழல், லஞ்சம், போதை., சாதீய இழிவு தீண்டாமை,, இவைகளுக்கு எதிரான புரட்சிகர போர்" என்றார்.

சைக்கிள் கேப்
சீமான் பேசியுள்ளதை பார்த்தால், வரும் 2024 தேர்தலுக்கு இப்போதே ரெடியாகிவிட்டார் என்றே நினைக்க தோன்றியது.. மற்றொருபுறம், முதல்வரை கிண்டலடித்து பேசியது போல் தெரியவில்லை.. ஒரு கட்சி தலைவருக்கு இயல்பாகவே எழக்கூடிய நடைமுறை சிக்கல்கள் என்ன என்பதை உணர்ந்தே சீமான் பேசியது போல்தான் இருக்கிறது.. நிர்வாகிகளை அணைத்து செல்வதில் கட்சி தலைவருக்கே, இத்தனை சிக்கல்கள் என்றால், மாநில முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பையும் சேர்ந்து வகிக்கும் ஸ்டாலினின் நிலைமை, மிக மிக சவாலானது என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை..!!












Click it and Unblock the Notifications