"அல்லேலுயா" பாபு.. உன் வீட்ல வந்து நாங்க உட்கார வேண்டிவரும்.. யார் சொல்றது பாருங்க.. கடுப்பில் திமுக
சென்னை: திமுக அமைச்சர் சேகர்பாபுவை, பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.. அத்துடன் திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கையையும் விடுத்து பேட்டி தந்துள்ளார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கும், பாஜகவுக்கும் இடையே சமீபகாலமாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதில் ஆதீனமும் தலையிட்டு, கோவில்களில் அரசுக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பி வருகிறார்..

ஆதீனம்: "ஆதீனம் அரசியல் பேச கூடாது என்கிறார்கள்? அப்படின்னா, கோவில்களில் ஏன் அரசியல் இருக்கிறது? இந்து கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்காக மடாதிபதிகள், ஆதீனங்கள் கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும்" என்று கேட்டு வருகிறார்.
இதற்கு சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்திருந்தார்.. "நாங்கள் அடங்கி போகிறோம் என்று திமிர கூடாது. முதல்வரின் வழிகாட்டுதலால், அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தால் எகிறி அடிக்க முடியும். ஆனால் அது நல்லா இருக்காது.. இதை பயமாக கருத கூடாது. எங்களின் பதுங்கலை பயப்படுகிறோம் என்று கருத வேண்டாம் என்று காட்டமாக கூறியிருந்தார்.
பழைய சேகர்பாபு: ஆனால், பழைய சேகர் பாபுவை பார்த்துவிட வேண்டாம் என்று கூறியதாக சேகர்பாபு சொன்னதாக பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.. உடனே பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், பழைய சேகர்பாபுவை பார்க்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்த தல எல்லோரும் பாத்துக்கோங்க, என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருக்கும் சேகர்பாபுவின் போட்டோவை ஷேர் செய்திருந்தார்.
இப்படியான மோதல் போக்குகள் வெடித்துவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
குறிப்பாக, எச்.ராஜா இந்த விஷயத்தில் கடுமையாக திமுகவை விமர்சித்து வருகிறார். செய்தியாளர்களிடம் எச். ராஜா நேற்று பேசும்போது சொன்னதாவது
அறநிலையத்துறை: "திமுக அரசு மதசார்பற்ற அரசு என்கிறார்கள்.. ஆனால், இந்து சமய அறநிலையத்துறையும், இந்து கோயில்களும் சட்டப்படியே மதம் சார்ந்ததுதான். இந்து மதத்தை ஊக்குவிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு துறைதான் இந்து சமய அறநிலையத்துறை. ஆனால், இதுவரைக்கும் எந்த இந்து கோயில்களிலாவது தேவாரம், திருவாசகம் சொல்லி தருகிறார்களா? கிறிஸ்தவர்கள் மட்டும் சுவிஷேசம் பிரசங்கம் என்று வீடு வீடா போறாங்களே? அந்த மாதிரி வீடு வீடா இந்து மதத்திற்காக சேகர் பாபு போக வேண்டும்.
அதற்காகதான் இந்து அறநிலையத்துறையை உன்னிடம் கொடுத்துருக்காங்க. நீ "அல்லேலுயா" கத்துறதுக்காகவா இந்து சமய அறநிலையத் துறையை உன்ட்ட கொடுத்துருக்காங்க? உன்னுடைய சின்ன எஜமான் (உதயநிதியை) நான் கிறிஸ்தவன். என் மனைவி கிறிஸ்தவர்னு சொன்னாரே, அப்பவே சேகர் பாபுவுக்கு உற்சாகம் வந்தாச்சு.
அல்லேலுயா: அல்லேலூயா அல்லேலூயானு சொல்றாரு. ஆகவே, இந்து அறநிலையத்துறை இப்போது கிறிஸ்தவமயமாக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்து அல்லாதவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஸ்டாலின் அரசாங்கம் ஒரு நாகரீகமற்ற அரசாங்கம்.
மதுரை ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக, சிப்காட்டுக்கு கோயில் நிலத்தை இந்த இந்து விரோத சர்க்கார் தந்திருக்கிறது.. ஆனால், இந்த அல்லேலுயா பாபு, கோயில் நிலங்களை எல்லாம் காலேஜ் கட்டுறேன், சிப்காட்டு கட்டுறேன் என்று ஒவ்வொன்னா தந்துட்டு இருக்காரு. இது சட்ட விரோதமானது. சேகர் பாபுவை நான் எச்சரிக்கிறேன்.
வார்னிங்: கோயில் நிலத்தை எடுத்தால், உங்க வீட்டுக்கு நாங்க வந்து உட்கார வேண்டியிருக்கும். இந்து கோயிலில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்களுக்கு எப்படி கொடுப்பீங்க.. மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை" என்றார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications