விசாரணைக்காக ஆபரேஷனையே தள்ளி வைத்த செந்தில் பாலாஜி! அமலாக்கத்துறையை ஆட வைத்த வக்கீலின் அந்த பாயிண்ட்
சென்னை: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் செந்தில் பாலாஜி தனது சிகிச்சையையே ஒத்தி வைத்தார் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ செய்த வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

நேற்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ செய்த வாதத்தில், செந்தில் பாலாஜிக்கு ஜூன் 18-ம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதயத் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. ஆனால், அமலாக்க இயக்குனரகத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் அதை ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு மருத்துவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் தனது சிகிச்சையையே ஒத்தி வைத்தார். அப்படிப்பட்ட நபர் விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார் என்று எப்படி கூறுவது. அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே ஜூன் 17 முதல் 24ம் தேதி வரை 8 நாட்கள் கஸ்டடி கொடுத்துவிட்டனர். ஆனால் அப்போது அமலாக்கத்துறை கஸ்டடி எடுக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட முடியாது, என்று கூறினார். இதற்கு அமலாக்கத்துறை சார்பாக ஆஜாரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மருத்துவமனையிலேயே அவரைக் காவலில் எடுத்திருந்தால், விசாரணையின்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பேற்பார்.. நாங்கள் பொறுப்பேற்க்க முடியாது. அதனால்தான் அப்போது அவரை காவலில் எடுக்கவில்லை என்று பதில் அளித்தார்.
இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.
இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றி சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.
அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உள்ளது.
விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார்.
நேற்று செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார். அதில், அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.
பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருத்தப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.
கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர், என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications