Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு முழுக்க 7 லட்சம் பேருக்கு அரசு மெசேஜ் அனுப்பியதா? வருமான வரியில் இதுதான் முக்கியம்! கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு அனுப்பியதாக பொய்யான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 இலட்சம் ஓய்வூதியர்கள் சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் 37 மாவட்ட கருவூலங்கள் மூலமாக தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்று வருகின்றனர்.

Did Tamil Nadu Government send messages to pension getters on the Income Tax regime

இது தொடர்பாக ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து வருமானவரி புதிய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய நடைமுறைப்படி பிடித்தம் செய்யப்பட வேண்டுமா என்ற விவரத்தினையும் ஓய்வூதியர்கள் தங்களது பேன்கார்டு எண்ணையும் சம்மந்தப்பட்ட கருவூலத்திற்கு 15.05.2024-குள் தெரிவிக்க வேண்டுமென கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அறிவுறுத்தியதாக 14.05.2024 நாளிட்ட பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டவாறு கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்திலிருந்து எந்தவிதமான சுற்றறிக்கையோ அல்லது அறிவுறுத்தலோ கருவூலங்களுக்கோ மற்றும் ஓய்வூதிய சங்கங்களுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் பேன்கார்டு எண்ணை சமர்பித்தல் மற்றும் வருமானவரி பிடித்தம் செய்யும் முறையினை (புதிய/பழைய) தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிக்கு எந்தவிதமான காலஅவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை.

எனவே, 14.05.2024 அன்று பத்திரிக்கைகளில், ஓய்வூதியர்கள் வருமானவரி பிடித்தம் தொடர்பான விவரங்களை 15.05.2024-க்குள் சமர்பிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்து வெளிவந்த செய்திகள் கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்தினால் வெளியிடப்படவில்லை எனவும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது

வருமான வரி: பொதுவாக பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும்.

பிஸ்னஸ் செய்து வருவாய் வாங்கும் மக்கள்.. ஒரே ஒரு முறை மட்டும் பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது நீங்கள் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறினால்.. அதன்பின் மாற முடியும்.

பழைய வருமான வரி முறையை பயன்படுத்தும் நபர்கள்.. அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பழைய முறைக்கும் மாற முடியும். ஆனால் புதிய முறையில் இருந்து பழைய முறைக்கு மாற ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

2023ல் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வருடம் இதில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் (old regime) மத்திய அரசு கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி.. எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.

முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை; பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.

ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+