சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் ஓவர்.. தமிழ்நாட்டிற்கு 2 குட் நியூஸ்.. இப்படியே போனா விரைவில் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் கொரோனா அலை தமிழ்நாட்டில் உச்சத்தை கடந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    21 மாவட்டங்களில் கொரோனா குறைகிறது, 4 மாவட்டங்களில் மட்டும் சவால் -முக்கிய தகவல் கூறிய ராதாகிருஷ்ணன்

    தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் காரணமாக மூன்றாம் அலை தொடங்கி நடந்து வருகிறது . டிசம்பர் கடைசி வாரம் தொடங்கிய கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு தமிழ்நாட்டில் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 5 நாட்களாக தினசரி கேஸ்கள் குறைந்த வண்ணம் இருக்கின்றன.

    தமிழ்நாட்டில் இந்த வார தொடக்கத்தில் 31 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவானது. ஆனால் கடந்த 5 நாட்களாக கேஸ்கள் படிப்படியாக குறைந்து வருகிறது..

     ஓ இதுதான் காரணமா! டெல்டா முதல் ஓமிக்ரான் வரை.. உருமாறிய கொரோனா வகைகளுக்கு வித்தியாசமான அறிகுறிகள்! ஓ இதுதான் காரணமா! டெல்டா முதல் ஓமிக்ரான் வரை.. உருமாறிய கொரோனா வகைகளுக்கு வித்தியாசமான அறிகுறிகள்!

    கேஸ்கள் குறைவு

    கேஸ்கள் குறைவு

    தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் பதிவான கேஸ்கள் விவரம் 30580, 30744, 30055, 29976. இந்த நிலையில் நேற்று மேலும் பாதிப்பு குறைந்தது. நேற்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 5 நாட்களாக கொரோனா கேஸ்கள் 700 என்று அளவில் வேகமாக குறைந்து வருகின்றன. வரும் நாட்களில் கொரோனா பரவல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2,13,534 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

     ஆக்டிவ் நோயாளிகள்

    ஆக்டிவ் நோயாளிகள்

    தமிழ்நாட்டில் நேற்று 53 பேர் கொரோனா காரணமாக பலியானார்கள். இதுவரை 37,412 பேர் தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் கேஸ்கள் குறைந்தாலும் பலி எண்ணிக்கை லேசாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் அதிகமாக பதிவான கொரோனா கேஸ்களின் எதிரொலியாக இந்த வாரம் பலி எண்ணிக்கை உயர்வதாக கூறப்படுகிறது. கடந்த 6 நாட்களில் தமிழ்நாட்டில் பதிவான பலி எண்ணிக்கை விவரம் 33, 40, 46, 48, 47, 53.

    இரண்டு குட் நியூஸ்

    இரண்டு குட் நியூஸ்

    தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலுக்கு இடையே இரண்டு குட் நியூஸ்கள் வந்துள்ளன. முதல் விஷயம் தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் குறைந்துள்ளது. ஜனவரி இறுதியில் தமிழ்நாட்டில் கொரோனா உச்சத்தை கடக்கும் என்று ஐஐஎஸ்டி ஆய்வு சொல்லி இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு கொரோனா உச்சத்தை கடந்தது போல கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் கொரோனா கேஸ்கள் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரிய அளவில் உயரவில்லை

    பெரிய அளவில் உயரவில்லை

    தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில் பலி எண்ணிக்கை லேசாக உயர்ந்தது போல் தெரியலாம். ஆனால் மொத்தமாக பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இரண்டாம் அலையில் டெல்டா பரவலின் போது தமிழ்நாட்டில் தினமும் 35 ஆயிரம் கேஸ்கள் பதிவானால் பலி எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை அவ்வளவு இல்லை. இது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. ஓமிக்ரான் அவ்வளவு ஆபத்தானதாக இல்லை என்பதை இது உணர்த்துகிறது.

     குறையும் வாய்ப்பு

    குறையும் வாய்ப்பு

    தமிழ்நாடு ஒருவேளை கொரோனா பரவல் உச்சத்தை கடந்துவிட்டதாக கருதினால் அது மொத்த பெருந்தொற்றுக்கும் ஒருவகையில் முடிவாக இருக்கும். ஓமிக்ரான் பரவலோடு கொரோனா பரவல் முடிவிற்கு வர அதிகம் வாய்ப்பு உள்ளதாக உலக மருத்துவ நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். வேக்சின் காரணமாக மக்களுக்கு ஏற்கனவே எதிர்ப்பு சக்தி உள்ளது, மேலும் ஓமிக்ரான் டெல்டா வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான ஆண்டிபாடிகள் உடலில் இருக்கும் . என்று உலக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மந்தை எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி கொரோனா பரவலை தடுக்கும்

    புதிய வேரியண்ட்

    புதிய வேரியண்ட்

    இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் முடிவிற்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வகை உருமாறிய கொரோனா எதுவும் உருவாகாமல் இருந்தால் இதோடு கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் முடியும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் கொரோன கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் தற்போது லாக்டவுனில் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரவு நேர லாக்டவுன் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. ஞாயிறு லாக்டவுன் இந்த வாரத்தோடு முடிவிற்கு வருகிறது. பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்படுகிறது. அதேபோல் வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Did Tamilnadu Cross the Coronavirus third wave already? What number says?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X