இரவோடு இரவாக.. பதறியடித்து.. ஸ்டாலினுக்கு திடீரென போனை போட்ட பாஜக தலைகள்? என்ன காரணம்?
சென்னை: எதிர்பார்த்த படியே லோக்சபா சபாநாயகர் பதவி பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்காத நிலையில் சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளும் போட்டியிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினிடம் பாஜகவினர் இரவோடு இரவாக போன் செய்து பேசியதாக தகவல்கள் வருகின்றன.
லோக்சபா சபாநாயகர் பதவி மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில்தான் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்தியா கூட்டணியும் அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சியான இந்திய கூட்டணிக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், இரு கூட்டணிகளும் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

கடும் போட்டி: ஜூன் 26 ஆம் தேதி, மக்களவை கூடும் போது, அடுத்த சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஓம் பிர்லாவை NDA வேட்பாளராகவும், காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் எதிர்க்கட்சி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிக எம்பிக்கள் ஆதரவு பெறுபவர் சபாநாயகர் ஆவார்.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு கோட்டாவில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்த பாஜக ஓம் பிர்லாவும், கேரளாவில் இருந்து நீண்ட காலம் லோக்சபா எம்.பி.யாக இருந்த கே.சுரேஷ் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 25ம் தேதியும், தேர்தல் ஜூன் 26ம் தேதியும் நடைபெறும்.
இதில் இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவை சபாநாயகர் தேர்தலில் பெற முயன்று வருகின்றன. இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர்.
ஏன் இந்த போஸ்ட் முக்கியம்: கடந்த 10 வருடங்களில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்த நிலையில் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயக்கருகே இருக்கும். இதில் கோர்ட் கூட தலையிட முடியாது. உதாரணமாக எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது தெலுங்கு தேசம் எம்பிக்களை பாஜக பிரித்து தங்கள் பக்கம் இழுக்கலாம் . இதனால் தெலுங்கு தேசம் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் தெலுங்கு தேசத்து எம்பி சபாநாயகராக இருந்தால்.. அவர் அணி மாறி வாக்களிக்கும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அதுவே பாஜக எம்பியாக இருந்தால்.. தெலுங்கு தேசம் எம்பிகளை தகுதி நீக்கம்ஸ் செய்து அணி மாறும் எம்பிக்களுக்கு ஆதரவாக கூட செயல்படுவார்.
இதேதான் நிதிஷ் குமார் கட்சியிலும். இதன் காரணமாகவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை முக்கியமானதாக பார்க்கின்றனர். இதை மனதில் வைத்தே அவர்களிடம் இந்திய கூட்டணி தலைவர்களும் பேசி வருகிறார்களாம்.
ஸ்டாலின் பேச்சு; இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினிடம் பாஜகவினர் இரவோடு இரவாக போன் செய்து பேசியதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் மட்டுமின்றி இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா உட்பட காங்கிரஸ் அல்லாத கட்சி தலைவர்களிடம் பேசி உள்ளார்களாம்.
அதாவது ஒருவேளை.. நிதிஷ், நாயுடு காலை வாரினால், சபாநாயகர் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இரவோடு இரவாக இவர்கள் பேசி உள்ளனராம். அதாவது இந்தியா கூட்டணி எதிர் வேட்பாளரை இன்று அறிவிக்கும் என்பதை உணர்ந்து நேற்று இரவே இதற்கான பேச்சுக்கள் நடந்து உள்ளதாம்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் உட்பட எந்த இந்திய கூட்டணி தலைவர்களும் பாஜகவிற்கு செவி மறுக்கவில்லை, இறங்கி வரவில்லை என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications